சின்மயி
சின்மயி ஸ்ரீபாத | |
---|---|
பின்னணி விவரம் | |
பிறப்பு பெயர் | சின்மயி ஸ்ரீபாத |
பிறந்த தேதி | செப்டம்பர் 10, 1984 |
வகை | கருநாடக இசை |
தொழில்கள் | பின்னணிப் பாடகி வானொலித் தொகுப்பாளர் மொழிபெயர்ப்பாளர் வலைத்தளப் பயனர் தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஒலிச்சேர்க்கை |
இசைத்துறையில் | 2002-இன்றுவரை |
இணையத்தளம் | http://www.chinmayionline.com/ |
சின்மயி ஸ்ரீபதா (தெலுங்கு: చిన్మయి శ్రీపాద) (பிறப்பு: செப்டம்பர் 10, 1984) இந்தியாவைச் சேர்ந்த தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம்பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் இவர் பாடிய முதல் திரைப்படப் பாடலாகும். பின்பு எனக்கு உனக்கு, பாய்ஸ், அறிந்தும் அறியாமலும், சண்டக்கோழி போன்ற பல தமிழ்த் திரைப்படங்களில் பாடியுள்ளார்.
சின்மயி, ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் போட்டியைத் தொகுத்து வழங்கினார். மேலும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். சென்னையில் ஒளிபரப்பாகும் ஆஹா பண்பலையில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை 'ஆஹா காப்பி க்ளப்' எனும் காலை ஏழு மணி முதல் பத்து மணி வரை நடைபெறும் வானொலி நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாகவும் இவர் இருக்கிறார். இவர் திரைப்படத்தில் பின்னணி குரல் தருபவராகவும் இருக்கிறார். சில்லுனு ஒரு காதல் படத்தில் பூமிகா சாவ்லாவிற்கு, உன்னாலே உன்னாலே படத்தில் தனிஷா முகெர்ஜிக்கு, சத்தம் போடாதே படத்தில் பத்மபிரியாவிற்கு, தாம் தூம் படத்தில் கங்கனா ரனாத்திற்கு, ஜெயம் கொண்டான் படத்தில் லேகா வாஷிங்டனிற்கு, சக்கரகட்டி படத்தில் வேதிகாவிற்கு மற்றும் வாரணம் ஆயிரம் படத்தில் சமீரா ரெட்டிக்கு என பல திரைப்படங்களில் கதாபாத்திரங்களுக்கு இவர் பின்னணிக் குரல் தந்துள்ளார்,
ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில், மணிரத்னம் இயக்கத்தில், சிம்ரன் மற்றும் கீர்த்தனாவின் நடிப்பில் படத்தில் இடம்பெற்ற இவரது முதல் பாடல் வெற்றிப்பாடலாக அமைந்தது. சின்மயி, ஏ. ஆர். ரகுமானின் இசையமைப்பிலேயே நிறைய பாடல்களைப் பாடியுள்ளார். குரு படத்தின் தேரே பினா மற்றும் மையா மையா பாடல்களைப் பாடினார்.
சர்ச்சை
சின்மயி டிவிட்டர், முகநூல், வலைப்பதிவு போன்ற சமூக தளங்களில் இயங்குபவர். கஜேந்திரகுமார் என்பவர் தனக்கு 12 லட்சம் தர வேண்டும் எனவும் அதை பெற்றுத்தர உதவும்படியும் மற்றொரு புகாரில் டிவிட்டர் தளத்தில் தன்னுடைய ஆபாச புகைப்படங்களும், தன்னைப்பற்றி கீழ்த்தரமாகவும் எழுதியதற்கு காரணமான 6 நபர்களை கைது செய்யவேண்டும் என்று சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார்.[1][2] இதன் அடிப்படையில் காவல்துறையினர் இரண்டு டிவிட்டர் உபயோகப்படுத்தும் நபர்களை கைது செயதனர்.[3] ஆறு பேரில் லாஸ் ஏஞ்சலஸ் நகரை சார்ந்த எழுத்தாளர் இராம் என்பவரும் ஒருவர். தன் மீதான புகார் தவறானது எனவும் அதனால் தான் மனவேதனை அடைந்துள்ளதாகவும் அதை திரும்ப பெறாவிட்டால் மான நஷ்ட வழக்கு போடவேண்டி வரும் என கூறியுள்ளார்.[4] சின்மயி இட ஒதுக்கீடு, தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது குறித்து கருத்து சொன்னதால் தான் அவருக்கு எதிர் வினை கடுமையாக இருந்தது எனவும் பலரால் கூறப்படுகிறது.[5]. மீனவர்கள் மீன்களைக்கொல்வது பாவமாயில்லையா என்று அவர் டிவிட்டரில் சொன்னது மீனவர்களுக்கு எதிரானது என்று பலரால் கருதப்படுகிறது.[6] இந்துஸ்தான் டைம்ஸ் என்கிற இதழில் பொழுதுபோக்குப் பாதுஷாக்கள் என்கிற தலைப்பில் 5 பேரில் நான்காவதாக சின்மயியையும் ஐந்தாவதாக ராசனையும் குறிப்பிட்டிருந்தது.[7] அது பிடிக்காததும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. இவர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் ஒன்றை 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் மீண்டும் சர்ச்சையைக் கிளம்பியுள்ளார். 2004 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் நடந்த ஓர் இசை நிகழ்ச்சி விழாவிற்காக சென்ற போது தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று பாடகி சின்மயி பாலியல் புகார் அளித்தார்.[8]
திருமணம்
இவர் மே 06, 2014 அன்று பிரபல நடிகரான ராகுல் ரவீந்திரன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்தில் கலந்து கொண்டவர்களிடம், மணமக்கள் பரிசு பொருள் எதுவும் வாங்கவில்லை. அதற்கு பதில், லடாக்கில் உள்ள மலை சாதியினரின் பள்ளிக்கு கட்டிடம் கட்ட உதவும்படி கேட்டுக்கொண்டனர்.[9]
சின்மயி பாடிய பாடல்கள்
ஆண்டு | பாடல் | திரைப்படம் | இசையமைப்பாளர் |
---|---|---|---|
2002 | ஒரு தெய்வம் தந்த பூவே | கன்னத்தில் முத்தமிட்டால் | ஏ.ஆர்.ரஹ்மான் |
ஒரு தடவை சொல்வாயா | வசீகரா | எஸ். ஏ. ராஜ்குமார் | |
கிறுக்கா கிறுக்கா | விசில் | இமான் | |
உயிர் பிரிந்தாலும் | சேனா | ||
இதயமே | நம்ம ஊரு | ||
பூந்தேனா | ஈரநிலம் | சிற்பி | |
2003 | மைனாவே மைனாவே | தித்திக்குதே | வித்யாசாகர் |
பூ பூ பூங்குருவி | தத்தி தாவுது மனசு | தேவா | |
என்ன இது | நள தமயந்தி | ரமேஷ் விநாயகம் | |
பிளீஸ் சார் | பாய்ஸ் | ஏ.ஆர்.ரஹ்மான் | |
கண்ணா | அன்பே உன் வசம் | தினா | |
பிரிவெல்லாம் பிரிவல்ல | சூரி | தேவா | |
பூவே முதல் பூவே | காதல் கிறுக்கன் | தேவா | |
சந்திப்போமா | எனக்கு 20 உனக்கு 18 | ஏ.ஆர்.ரஹ்மான் | |
ஒரு நண்பன் இருந்தால் | எனக்கு 20 உனக்கு 18 | ஏ.ஆர்.ரஹ்மான் | |
என் உயிர் தோழியே | கண்களால் கைது செய் | ஏ.ஆர்.ரஹ்மான் | |
2004 | புது காதல் காலமிது | புதுகோட்டையிலிருந்து சரவணன் | யுவன் சங்கர் ராஜா |
என்னை தீண்டிவிட்டாய் | குத்து | ஸ்ரீகாந்த் தேவா | |
நீ தானே என் மேல | ஜனனம் | பரத்வாஜ் | |
இஃப் யு வோன கம் அலோங்க் | நியூ | ஏ.ஆர்.ரஹ்மான் | |
ஒப்பனக்கார வீதியிலே | கிரி | இமான் | |
எங்கு பிறந்தது | விஷ்வ துளசி | இளையராஜா - எம். எஸ். விஸ்வநாதன் | |
காதலிக்கும் ஆசையில்லை | செல்லமே | ஹாரிஸ் ஜெயராஜ் | |
2005 | நூதனா | கற்க கசடற | பிரயோக் |
சில் சில் | அறிந்தும் அறியாமலும் | யுவன் சங்கர் ராஜா | |
2006 | காதல் நெருப்பின் | வெயில் | ஜி. வி. பிரகாஷ் குமார் |
2007 | சஹானா | சிவாஜி | ஏ.ஆர்.ரஹ்மான் |
ஆருயிரே,மைய்யா | குரு 2007 | ஏ.ஆர்.ரஹ்மான் | |
2008 | ஆவாரம் பூ | பூ | எஸ்.எஸ்.குமரன் |
சின்னம்மா,ஐ மிஸ் யூ டா | சக்கரகட்டி | ஏ.ஆர்.ரஹ்மான் | |
2009 | லேசா பறக்குது | வெண்ணிலா கபடி குழு | செல்வகணேஷ் |
நிலா நீ வானம் | பொக்கிஷம் | சபேஷ்-முரளி | |
வாராயோ வாராயோ | ஆதவன் | ஹாரிஸ் ஜெயராஜ் | |
2010 | பூவே பூவே | சித்து +2 | தமன் |
கிளிமஞ்சாரோ | எந்திரன் | ஏ.ஆர்.ரஹ்மான் | |
அன்பில் அவன் | விண்ணைத்தாண்டி வருவாயா | ஏ.ஆர்.ரஹ்மான் | |
2014 | இதயம் | கோச்சடையான் | ஏ.ஆர்.ரஹ்மான் |
2015 | என்னோடு நீ இருந்தால் | ஐ | ஏ.ஆர்.ரஹ்மான் |
ரோஜா கடலே | அனேகன் | ஹாரிஸ் ஜெயராஜ் | |
இதயத்தை ஏதோ ஒன்று | என்னை அறிந்தால் | ஹாரிஸ் ஜெயராஜ் | |
நான் அவள் இல்லை | மாஸ் | யுவன் சங்கர் ராஜா | |
2016
2021 |
சைரட் ஜலோ ஜி | சைராட் மராத்தி | அஜய்-அதுல் |
Neevevvaro | Boyfriend For Hire | Gopi Sunder |
பின்னணி குரல் கொடுத்த படங்கள்
ஆண்டு | திரைப்படம் | யாருக்கு பின்னணி குரல் கொடுத்தார் | குறிப்பு |
---|---|---|---|
2006 | சில்லுனு ஒரு காதல் | பூமிகா சாவ்லா | |
2007 | உன்னாலே உன்னாலே | தனிஷா முகெர்ஜி | |
சத்தம் போடாதே | பத்மபிரியா | ||
2008 | ஜெயம் கொண்டான் | லேகா வாஷிங்டன் | |
தாம் தூம் | கங்கனா ரனாத் | ||
சக்கரகட்டி | வேதிகா குமார் | ||
வாரணம் ஆயிரம் | சமீரா ரெட்டி | ||
2009 | தநா-07 ஏஎள் 4777 | மீனாட்சி | |
யாவரும் நலம் | நீத்து சந்திரா | ||
மோதி விளையாடு | காஜல் அகர்வால் | ||
கண்டேன் காதலை | தமன்னா | ||
2010 | அசல் | சமீரா ரெட்டி | |
ராக்தா சரித்ரா | ராதிகா அப்தே | ||
தீராத விளையாட்டுப் பிள்ளை | நீத்து சந்திரா | ||
விண்ணைத்தாண்டி வருவாயா | திரிஷா கிருஷ்ணன் | ||
ஏ மாயா சேசவா | சமந்தா ருத் பிரபு | ||
சுறா | தமன்னா | ||
மன்மத பாணம் - (தெலுங்கு) | திரிஷா கிருஷ்ணன் | ||
2011 | கோ | கார்த்திகா நாயர் | |
நடுநிசி நாய்கள் | சமீரா ரெட்டி | ||
வந்தான் வென்றான் | டாப்ஸே பண்ணு | ||
2012 | வேட்டை | சமீரா ரெட்டி | |
மாற்றான் | காஜல் அகர்வால் | ||
2014 | லிங்கா | சோனாக்சி சின்கா |
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-10-20. பார்க்கப்பட்ட நாள் 2012-10-25.
- ↑ http://kathiravan.com/newsview.php?mid=56&id=5818[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://dinamani.com/latest_news/article1311805.ece
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-10-26. பார்க்கப்பட்ட நாள் 2012-10-25.
- ↑ http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=1680:2012-10-23-05-56-48&catid=1:2010-07-12-16-58-06&Itemid=19
- ↑ டிவிட்டரில் சின்மயி கருத்து
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-10-22. பார்க்கப்பட்ட நாள் 2012-10-25.
{cite web}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "``வைரமுத்துவை ஏன் என் திருமணத்துக்கு அழைத்தேன்! - விளக்கிய சின்மயி".விகடன் (12 அக்டோபர், 2018)
- ↑ "நடிகரை மணந்தார் பின்னணிப் பாடகி சின்மயி!". விகடன் ( மே 06, 2014)
வெளியிணைப்புகள்
- What to name it - சின்மயி ஸ்ரீபதாவின் வலைப்பதிவு - (ஆங்கில மொழியில்)
- சின்மயி ஸ்ரீபதாவின் உத்தியோகபூர்வ ஐபோன் செய்நிரல் (iPhone App)
- ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்த்தளம் பரணிடப்பட்டது 2008-05-07 at the வந்தவழி இயந்திரம்
- சின்மயி அவர்களின் ஆர்குட் பக்கம்