சிராங் மாவட்டம்

சிராங் மாவட்டம்
চিৰাং জিলা
மாநிலம்அசாம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்போடோலாந்து
தலைமையகம்காஜல்கோன்
பரப்பு1,169.9 km2 (451.7 sq mi)
மக்கட்தொகை481818 (2011)
மக்களவைத்தொகுதிகள்கோக்ரஜார்
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை1. சித்லி (பழங்குடியினர்), 2. பிஜ்னி
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

சிராங் மாவட்டம் district அசாம் மாநிலத்தின் 35 மாவட்டங்களில் ஒன்று. அசாம் மாநிலத்தில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டங்களில் ஒன்று. [1]இதன் நிர்வாகத் தலைமையிடம் காஜல்கோன் நகரம் ஆகும்.போடோலாந்து ஆட்சி மன்றக் குழுவினால் நிர்வகிக்கப்படுகிற மாவட்டங்களில் ஒன்று. இங்கு பழங்குடியினர் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர். [2]கரோ மொழியில் ”சி” என்றால் நீர் என்று பொருள். ராங் என்றால் செல்வம் என்று பொருள்.

மக்கள் தொகை

2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது, 481,818 மக்கள் வாழ்ந்தனர். [1] சதுர கிலோமீட்டருக்குள் 244 பேர் வாழ்கின்றனர். [1] சராசரியாக ஆயிரம் ஆண்களுக்கு 969 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் உள்ளது. [1] இந்த மாவட்டத்தில் வாழ்வோரில் 64.71% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். [1]

சான்றுகள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  2. Law, Gwillim (2011-09-25). "Districts of India". Statoids. பார்க்கப்பட்ட நாள் 2011-10-11.

இணைப்புகள்