சிரிப்பொலி தொலைக்காட்சி

சிரிப்பொலி தொலைக்காட்சி
ஒளிபரப்பு தொடக்கம் 21 பிப்ரவரி 2009
உரிமையாளர் கலைஞர் டிவி (பி) லிமிடெட்
நாடு இந்தியா
தலைமையகம் சென்னை, தமிழ்நாடு,
துணை அலைவரிசை(கள்)

சிரிப்பொலி தொலைக்காட்சி என்பது 'கலைஞர் டிவி (பி) லிமிடெட்' நிறுவனத்திற்கு சொந்தமான 24 மணி நேர நகைச்சுவை தொலைக்காட்சி சேவை ஆகும். இந்த அலைவரிசை பிப்ரவரி 21, 2009 அன்று இசையருவி தொலைக்காட்சியின் ஓராண்டு நிறைவு தினத்தன்று கலைஞர் தொலைக்காட்சியின் ஒரு பகுதியாகவும், நகைச்சுவை ரசிகர்களுக்காக பிரத்யேகமான பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்டது.[1][2]

ஆதித்யா தொலைக்காட்சிக்கு அடுத்தபடியாக நகைச்சுவைக்கு என்று இருக்கும் இரண்டாவது அலைவரிசை இதுவாகும். நகைச்சுவையாளர்களை கௌரவிக்கும் விதமாக்க இந்த தொலைக்காட்சியில் 'சிரிப்பொலி விருது' என்ற பெயரில் 2011 ஆம் ஆண்டு விருது வழங்கப்பட்டது. அத்துடன் விடியும் வரை சிரி, சிரிப்பு மழை, செம ரகளை, சிந்தனை சிரிப்பு போன்ற பல நகைச்சுவை சார்ந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்கிறது.

வரலாறு

இந்த அலைவரிசை பிப்ரவரி 21, 2009 அன்று நடிகர்கள் கமல்ஹாசன், மனோபாலா, எம். எசு. பாசுகர் போன்ற பல திரைப்பட நட்சத்திரங்கள் முன்னிலையிலும் இசையருவி தொலைக்காட்சியின் ஓராண்டு நிறைவு தினத்தன்று ஆரம்பிக்கப்பட்டது.[3][4]

மேற்கோள்கள்