சிறீ பிரகாசா
சிறீ பிரகாசா Sri Prakasa | |
---|---|
பம்பாய் ஆளுநர் (1960 முதல் மகாராட்டிரா) | |
பதவியில் 10 திசம்பர் 1956 – 16 ஏப்பிரல் 1962 | |
முன்னையவர் | ஹரேகிருஷ்ணா மகதாப் |
பின்னவர் | ப. சுப்பராயன் |
சென்னை மாகாண ஆளுநர் | |
பதவியில் 12 மார்ச் 1952 – 10 திசம்பர் 1956 | |
முன்னையவர் | கிருஷ்ண குமாரசிங் பவசிங் |
பின்னவர் | ஏ. ஜே. ஜான் ஆனாப்பரம்பில் |
அசாம் ஆளுநர் | |
பதவியில் 16 பெப்ரவரி 1949 – 27 மே 1950 | |
முன்னையவர் | ரொனால்டு பிரான்சிசு லொட்ச் (பதில்) |
பின்னவர் | ஜெய்ராம்தாசு தவ்லாத்ராம் |
பாக்கித்தானுக்கான 1-ஆவது இந்தியத் தூதர் | |
பதவியில் 1947–1949 | |
பிரதமர் | ஜவகர்லால் நேரு |
பின்னவர் | சீதா ராம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 3 ஆகத்து 1890 வாரணாசி, ஐக்கிய மாகாணங்கள், இந்தியா |
இறப்பு | 23 சூன் 1971 | (அகவை 80)
முன்னாள் கல்லூரி | மத்திய இந்து ஆண்கள் பள்ளி, கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் |
விருதுகள் | பத்ம விபூசண் |
ஸ்ரீ பிரகாசா (Sri Prakasa, இந்தி: श्री प्रकाश, 3 ஆகத்து 1890 – 23 சூன் 1971) ஓர் விடுதலைப் போராட்ட வீரரும் அரசியல்வாதியும் சிறந்த நிர்வாகியும் ஆவார். இந்தியாவின் முதல் பேராளராக பாக்கித்தானில் 1947 முதல் 1949 வரை பணியாற்றியவர். 1949 முதல் 1950 வரை அசாமிலும் 1952 முதல் 1956 வரை சென்னை மாகாணத்திலும் 1956 முதல் 1962 வரை மகாராட்டிர மாநிலத்திலும் ஆளுநராகப் பணியாற்றினார்.
சிறீ பிரகாசா 1890இல் வாரணாசியில் பிறந்தார். இளமையில் இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றுள்ளார். இந்திய விடுதலைக்குப் பின்னர் நிர்வாகியாகவும் ஆய அமைச்சராகவும் பணியாற்றினார். தமது 80வது அகவையில் 1971இல் இயற்கையெய்தினார்.
வெளி இணைப்புகள்
- பாக்கித்தானில் இந்திய தூதராக தினமணியில் அ. பிச்சை எழுதிய கட்டுரை- ஆகத்து 28, 2009 -இற்றை செப் 20, 2012
- பிரகாசா குறித்த நிகழ்வொன்று - கடைத்தெரு வலைப்பதிவு - செப்டம்பர் 2012
- காங்கிரஸ் அரங்கேற்றிய முதல் ஜனநாயகக் கொலை பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் - தேவன் வலைப்பதிவு மார்ச்சு 1, 2013