சி.எச்.மோடு

சி.எச்.மோடு (chmod) என்னும் கட்டளையை யுனிக்ஸ் இயங்குதளங்களில் பயன்படுத்த முடியும். இதன் மூலம் கனினியில் உள்ள கோப்புகளுக்கான அனுமதியை மாற்ற முடியும். இது கோப்புகளை பார்த்தல், மாற்றுதல், நீக்குதல், தொகுத்தல், இயக்குதல் உள்ளிட்ட வேலைகளை செய்வதற்கான அனுமதிகளை மாற்றித் தரும். சேஞ்சு மோடு (change mode) என்பதன் சுருக்கமாகவே சி.எச்.மோடு என்று அழைக்கப்படுகிறது.[1]

பயன்படுத்தும் முறை

chmod [options] mode[,mode] file1 [file2 ...]

[2]

  • -R கோப்புறைக்கு உள்ளிருக்கும் கோப்புகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும்
  • -f பிழை ஏற்பட்டாலும் மாற்றத்தை தொடரும்
  • -v மாற்றப்பட்ட விவரங்களை காட்டும்

கோப்புகளை பட்டியலிட்டு பார்க்க, ls, stat ஆகிய கட்டளைகளை வழங்கலாம்.

$ ls -l findPhoneNumbers.sh
-rwxr-xr--  1 dgerman  staff  823 Dec 16 15:03 findPhoneNumbers.sh
$ stat -c %a findPhoneNumbers.sh
754

அனுமதிகள் ஒன்பது எழுத்துகளில் காட்டப்படும். முதல் மூன்று எழுத்துகள், இந்த கட்டளையை வழங்குபவருக்கான அதிகாரங்களை காட்டுகிறது. இரண்டாவதாக உள்ள மூன்று எழுத்துகள், இவருடன் சேர்ந்த குழுவினருக்கான அனுமதிகளை குறிக்கின்றன. இறுதியாக உள்ள மூன்றெழுத்துகள் மற்றவர்களுக்கான அனுமதியைக் குறிக்கின்றன


நிலைகள்

இந்தக் கட்டளையை வழங்குவதற்கு மூன்று எண்கள் தேவைப்படும். இவை ஒவ்வொன்றும், மேற்கூறிய அதிகாரங்களை வழங்குவதற்கானவை.

r, w, x ஆகியன பார்த்தல், எழுதுதல், இயக்குதல் உள்ளிட்ட மூன்றையும் குறிக்கும்.

# அனுமதி rwx
7 பார்க்க, மாற்ற, இயக்க rwx
6 பார்க்க, மாற்ற rw-
5 பார்க்க, இயக்க r-x
4 பார்க்க மட்டும் r--
3 மாற்ற, இயக்க -wx
2 மாற்ற மட்டும் -w-
1 இயக்க மட்டும் --x
0 அனுமதிகள் இல்லை ---

பார்ப்பதற்கான அனுமதியைக் கொண்டு கோப்பை திறந்து பார்க்க மட்டுமே முடியும். மாற்றுவதற்கான அனுமதியைக் கொண்டு கோப்பை திருத்தவோ, நீக்கவோ முடியும். இயக்குவதற்கான அனுமதியைக் கொண்டு கோப்பை இயக்க முடியும். கோப்பு மென்பொருளாகவோ பயன்பாடாகவோ இருந்தால் இயங்கும். இல்லாவிடில் இயங்காது.

சான்றுகள்

இணைப்புகள்