சீனக் கடல்கள்
சீனக் கடல்கள் (China Seas) என்பவை அமைதிப் பெருங்கடலில் சீனாவைச் சுற்றியுள்ள கரையோரக் கடல்களைக் குறிக்கும். ஆசியக் கண்டத்தில் இருந்து அமைதிப் பெருங்கடலுக்கு மாறுவதற்கு முக்கிய கூறுகளாக இவை அமைகின்றன.[1]
சீனக் கடல்கள் எனக் கூறப்படுபவை:
- மஞ்சள் கடல் (பொகாய் கடல், கொரியா விரிகுடா உட்பட)
- கிழக்கு சீனக்கடல்
- தென்சீனக் கடல்
இக்கடல்களின் மொத்தப் பரப்பளவு 4.7 மில்லியன் சதுரகிமீ ஆகும். இது சீனப் பெரும்பரப்பின் அரைவாசிப் பரப்பளவாகும். இக்கடல்கள் யூரேசியக் கண்டத்தின் தென்கிழக்கே அமைந்துள்ளன. இவை இயற்கை வளங்கள் மிகுதியாகக் கொண்டவையாகும்.[2]