சுசில் கொய்ராலா

சுசில் கொய்ராலா
Sushil Koirala
நேப்பாளத்தின் 37வது பிரதமர்
பதவியில்
11 பெப்ரவரி 2014 – 12 அக்டோபர் 2015
குடியரசுத் தலைவர்ராம் பரன் யாதவ்
முன்னையவர்கில் ராஜ் ரெக்மி
பின்னவர்காத்க பிரசாத் சர்மா ஓலி
நேபாளி காங்கிரஸ் கட்சியின் 6வது தலைவர்
பதவியில்
22 செப்டம்பர் 2010 – 9 பெப்ரவரி 2016
முன்னையவர்கிரிஜா பிரசாத் கொய்ராலா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1939-08-12)12 ஆகத்து 1939
பீரத்நகர், மொராங்கு, நேபாளம்
இறப்பு9 பெப்ரவரி 2016(2016-02-09) (அகவை 76)
காட்மாண்டு, நேபாளம்
அரசியல் கட்சிநேபாளி காங்கிரஸ்

சுசில் கொய்ராலா (Sushil Koirala (நேபாளி: सुशील कोइराला; 12 ஆகத்து 1939 – 9 பெப்ரவரி 2016) நேப்பாள அரசியல்வாதியும், முன்னாள் நேபாளி காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆவார். இவர் 2014 பெப்ரவரி 10 ஆம் நாள் நேப்பாளப் பிரதமராக நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டார்.[1][2] 1954 ஆம் ஆண்டில் நேபாளி காங்கிரசுக் கட்சியில் இணைந்த இவர், கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்து, 2010 ஆம் ஆண்டில் கட்சியின் தலைவரானார்.[3]

வாழ்க்கைச் சுருக்கம்

சுசில் கொய்ராலா 1939 ஆம் ஆண்டில் போத் பிரசாத் கொய்ராலா( என்பவருக்கும் குமினிதி கொய்ராலா மகனாகப் பிறந்தார்.[4] இவர் திருமணம் செய்யவில்லை, அதுமட்டுமன்றி இவர் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர்.[4]

அரசியல் வாழ்க்கை

சுசில் கொய்ராலா 1954ஆம் ஆண்டில் அரசியலில் களமிறங்கினார். இவர் நேபாளி காங்கிரஸ்இன் சமூக சனநாயகக் கொள்கைகள் மூலம் மேலும் அரசியலில் களமிறங்க ஊக்கமளிக்கப்பட்டார். இவர் 1979ஆம் ஆண்டில் கட்சியின் மத்திய செயற்குழுவின் உறுப்பினராக செயற்பட்டார். 1996 ஆம் ஆண்டில் அதன் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார், அத்தோடு உப தலைவராக 1998ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார்.[3] 2010 இல் தலைவரானார்.

மேற்கோள்கள்

  1. "Sushil Koirala elected PM". Archived from the original on 2014-02-22. பார்க்கப்பட்ட நாள் 2014-02-11.
  2. "Koirala elected new PM". Archived from the original on 2014-03-02. பார்க்கப்பட்ட நாள் 2014-02-11.
  3. 3.0 3.1 "Sushil Koirala, Personal Resume". Archived from the original on 2012-03-21. பார்க்கப்பட்ட நாள் 2014-02-11.
  4. 4.0 4.1 [1] பரணிடப்பட்டது 2015-07-22 at the வந்தவழி இயந்திரம் Kantipur News, April 06,2010, "Sushil shifts to GPK’s apartment". Retrieved Nov 27,2013