சுபாசினி

சுபாசினி (Subhashini, பிறப்பு: அக்டோபர் 18, 1964) என்பவர் ஒரு தென்னிந்திய திரைப்பட, தொலைக்காட்சி நடிகை ஆவார். இவரது சகோதரி பிரபல நடிகை ஜெயசுதா ஆவார். இவர்கள் இருவரும் பிரபல நடிகையும் இயக்குநருமான விஜய நிர்மலாவின் மருமகள்களாவர்.[1] ரஜினியின் ஜானி திரைப்படத்தில் " ஆசைய காத்துல தூது விட்டு [2] " பாடலில் இவர் தோன்றினார். சிவரஞ்சனி (1978), டாக்டர் சினி ஆக்டர் (1982), மேகசந்தேசம் (1983) போன்ற படங்களில் தனது சகோதரியுடன் சேர்ந்து நடித்தார். அருந்ததி என்ற வெற்றிப் படத்தில் சுபாசினி நடித்தார்; அப்படத்தில் இவர் எதிர்நாயகனின் தாயாக நடித்தார். இவர் நாகஸ்திரம் (ஈ-டிவி), சுந்தரகாண்டா (ஜெமினி தொலைக்காட்சி ), சன் தொலைக்காட்சியில் செல்லமே போன்ற தொடர்களில் நடிக்கிறார்.

சுபாஷினியின் மகள் பூஜாவும் படங்களில் நடித்தார் [3]

பகுதி திரைப்படவியல்

மலையாளம்

  • கிரகலட்சுமி (1981)
  • கள்ளன் பவித்ரன் (1981)
  • அரஞ்சானம் (1982)
  • ஆஸ்தி (1983)
  • மின்னாரம் (1994)

தெலுங்கு

  • சிவரஞ்சனி (1978)
  • மா ஊல்லோ மகாசிவுடு (1978)
  • டைகர் (1979)
  • பிரேமா கனுகா (1981)
  • அக்னி பூலு (1981)
  • மேகசந்தேசம் (1982)
  • டாக்டர் சினி ஆக்டர் (1982)
  • அம்மாயிலு அப்பாயிலு (2003)
  • சீதையா (2003)
  • செப்பவே சிறுகாலி (2004)
  • அந்தகாடு (2005)
  • டாடா பிர்லா மத்யலோ லைலா (2006)
  • சாமன்யுடு (2006)
  • அனசூயா (2007)
  • அருந்ததி (2009)

கன்னடம்

  • ஃபிப்டி ஃபிப்டி (1984)
  • கடீமா கள்ளரு (1982)
  • அஜித் (1982)
  • நீ நன்ன கெல்லலரே (1981) - விருந்தினர் தோற்றம்
  • ஊர்வசி நீனே நன்னா பிரேயசி (1979) - அறிமுக படம்

தமிழ்

தொலைக்காட்சித் தொடர்கள்

  • நாகாஸ்திரம்
  • சுந்தரகாண்டா
  • நாகம்மா
  • செல்லமே

குறிப்புகள்

  1. "CineGoer.com - Gallery - Events - Jayasudha Exhibition". Archived from the original on 2012-04-08. பார்க்கப்பட்ட நாள் 2021-03-27.
  2. "ilaiyaraaja asaiya kathula - Google Search". www.google.com. பார்க்கப்பட்ட நாள் 2020-04-25.
  3. Photos - Telugu Cinema function - Audio Launch - 143 - Puri Jagan - Sairam Shankar - Chakri

வெளி இணைப்புகள்