சூரத்து அல்காரிஆ
சூரத்துத் சூரத்து அல்காரிஆ (அரபு மொழி: القارعة, al-Qāriʻah, மொ. 'திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி'), திருக்குர்ஆனின் 101 வது அத்தியாயம் ஆகும்.
திருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அருளப்பட்டன. மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டவை ‘மக்கிய்யா’ (மக்காவுடன் தொடர்புடயவை) எனவும், ’மதனிய்யா’ (மதீனாவுடன் தொடர்புடைவை) எனவும் குறிப்பிடப்படும்.
திருக்குர்ஆனின் 101 அத்தியாயமாகத் திகழும் சூரத்து அல்காரிஆ மக்கா வாழ்வின் போது அருளப்பட்டதால் இது மக்கிய்யா வகையைச் சார்ந்ததாகும்.[சான்று தேவை][1][2][3]
சூரத்து அல்காரிஆ (திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி)
அரபு | ஆங்கிலம் | தமிழாக்கம் |
---|---|---|
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ |
bi-smi llāhi r-raḥmāni r-raḥīm |
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்) |
|
۞"The 'Striking'." |
۞ திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி). |
|
۞"What is the 'Striking'?" |
۞ திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன? |
|
۞"And what can make you know what is the Striking?" |
۞ திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது? |
|
۞"It is the day when people will be like scattered moths." |
۞ அந்நாளில் சிதறடிக்கப்படட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள். |
|
۞"And the mountains will be like wool, fluffed up." |
۞ மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும். |
|
۞"Then as for one whose good deeds weigh heavier." |
۞ எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ- |
|
۞"Will be in a pleasant life." |
۞ அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார். |
|
۞"But as for one whose deeds weigh light." |
۞ ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ- |
|
۞"His dwelling will be hell." |
۞ அவன் தங்குமிடம் “ஹாவியா” தான். |
|
۞"And what can make you know what that is?" |
۞ இன்னும் (“ஹாவியா”) என்ன என்று உமக்கு அறிவித்தது எது? |
|
۞"A blazing fire." |
۞ அது சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும். |
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- Surah Al-Qaria[தொடர்பிழந்த இணைப்பு] ()
- http://www.youtube.com/watch?v=W-9iktUoEtE
- http://englishtafsir.com/Quran/101/index.html
- http://quran.com/101
பிற தகவல்கள்
|
மேற்கோள்களின் முன்தோற்றம்
- ↑ Lumbard, Joseph (April 2015). The Study Quran. San Francisco: HarperOne.
- ↑ "The Quranic Arabic Corpus - Word by Word Grammar, Syntax and Morphology of the Holy Quran". corpus.quran.com. பார்க்கப்பட்ட நாள் 21 May 2023.
- ↑ Iman Mohammad Kashi; Uwe Hideki Matzen. "Al-Quran (القرآن) — Online Quran Project — Translation and Tafsir". The Quran.