சூலூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி

சூலூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்திருப்பதி
மொத்த வாக்காளர்கள்2,31,638
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்கள்
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது ஆந்திரப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சஞ்சீவய்யா கிளிவெட்டி
கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி

சூலூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி (Sullurpeta Assembly Constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்தின் 175 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். சூலூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி எண் 121. இத்தொகுதி பட்டியலில் சாதியினருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதியாகும்.[1] திருப்பதி மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவும் ஒன்று.

இத்தொகுதியில் தற்போது ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் சஞ்சீவய்யா கிளிவெட்டி உறுப்பினராக உள்ளார்..

கண்ணோட்டம்

இந்த தொகுதி நெல்லூர் மாவட்டத்தில் உள்ள சர்வபள்ளி, கூடூர், வெங்கடகிரி மற்றும் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி, ஸ்ரீகாளஹஸ்தி, சத்தியவேடு ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளுடன் திருப்பதி மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

மண்டலங்கள்

மண்டல்
ஓஜிலி
நாயுடுபேட்டை
பெளாகூர்
தொரவரிசத்திரம்
சூல்லூர்பேட்டை
தடா

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1962 பசுப்புலேட்டி சித்தையாநாயுடு இதேகா
1967 பிட்லா வெங்கட சுப்பையா இதேகா
1972 பிட்லா வெங்கட சுப்பையா இதேகா
1978 பிட்லா வெங்கட சுப்பையா இதேகா (இ)
1985 மதனம்பெட்டி மனையா தெலுங்கு தேசம்
1989 பசலா பென்சலையா இதேகா
1994 பராசா ​​வெங்கட ரத்னய்யா தெலுங்கு தேசம்
1999 பராசா ​​வெங்கட ரத்னய்யா தெலுங்கு தேசம்
2004 நெலவல சுப்ரமணியம் இதேகா
2009 பராசா ​​வெங்கட ரத்னய்யா தெலுங்கு தேசம்
2014 கிளிவேட்டி சஞ்சீவையா ஒய்.எசு.ஆர்.கா.
2019 கிளிவேட்டி சஞ்சீவையா ஒய்.எசு.ஆர்.கா.

மேற்கோள்கள்

  1. "TABLE B - Parliamentary Constituencies". Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008 (PDF). The Election Commission of India. p. 31.