செந்தலைக் கிளி
செந்தலைக் கிளி | |
---|---|
மகாராட்டிரத்தின் மாங்கானில் செந்தலைக் கிளி இணை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | சிட்டாசிபார்மிசு
|
குடும்பம்: | சிட்டாசிடே
|
பேரினம்: | சிட்டாகுலா
|
இனம்: | P. cyanocephala
|
இருசொற் பெயரீடு | |
Psittacula cyanocephala (லின்னேயஸ், 1766) | |
செந்தலைக் கிளியின் பரம்பல் |
செந்தலைக் கிளி (Plum-headed parakeet) என்பது இந்திய துணைகண்டத்தில் மட்டுமே காணப்படும் ஒரு கிளி சிற்றினம் ஆகும்.
விளக்கம்
செந்தலைக் கிளியானது மைனாவை விட சற்று சிறியது. இது 22 செ.மீ. நீள வலுடன் சேர்த்து 33 செ.மீ நீளம் கொண்டது. இதன் மேல் அலகு ஆழ்ந்த மஞ்சளாகவும் கீழ் அலகு கறுப்பாகவும் இருக்கும். விழிப்படலம் மஞ்சள் கலந்த வெண்மையாகவும், கால்கள் பச்சை நிறத்திலும் இருக்கும். இதன் உடல் மங்கிய பச்சை நிறத்தில் இருக்கும். தலை நீலந்தோய்ந்த சிவப்பு நிறமாக இருக்கும். கறுப்பும் செம்புக் களிம்பின் நிறமுள்ள கோடு கழுத்தைச் சுற்றி வளையம் போலச் செல்லும். தேள் பட்டைகளில் கருஞ்சிவப்பான திட்டுகள் காணப்படும். வாலின் நடு இறகு நீல நிறமாக வெள்ளை நுனியோடு இருப்பது இதனை அடையாளங்கள் கண்டு கொள்ள உதவும். பெண் பறவையின் தலை மங்கிய சிவப்பாக சாம்பல் நிறம் போல இருக்கும். பெண் பறவைக்கு கழுத்தில் வளையமோ தோள் பட்டையில் சிவப்புத் திட்டோ இருக்காது.
காணப்படும் பகுதிகள் ,உணவு
தமிழகம் எங்கும் ஆங்காங்கே இலையுதிர்காடுகள் அதனைச் சார்ந்த விளை நிலங்கள், பழத்தோப்புகள், வீட்டுத் தோட்டங்கள் ஆகியவற்றில் 5 முதல் 10 வரையான குழுவாகத் திரியும். மனிதர் வாழ்விடங்களை அதிகம் விரும்புவதில்லை. வேகமாக அம்புபோலப் பறக்கும் இது கூட்டமாக, விளைந்த வயல்களில் விழுந்து கதிர்களைப் பாழ்ப்படுத்துவதோடு, பழத்தோட்டங்களிலும் கேடு செய்யும், தூஇ.. எனக் கூப்பிடுவது போலக் குரல் கொடுக்கும். கூட்டமாகப் புதர்களிடையேயும் அடர்ந்த இலைகளுடைய தோப்புகளிலும் இரவில் அடையும். [2]
இனப்பெருக்கம்
இவை சனவரி முதல் ஏப்ரல் முடிய இனப்பெருக்கம் செய்யும். காதலூட்டத்தில் ஆண் பறவை பெண்ணிடம் பட விளையாட்டுகளைப் புரியும். மரங்களில் உயரமான கிளைகளில் ஆழமாகக் குடைவு செய்து அதில் நான்கு அல்லது ஐந்து வெள்ளை முட்டைகளை பெண் பறவை இடும். மற்ற பறவைகளின் குடைந்த பொந்துகளை பயன்படுத்துவதும் உண்டு. அடைகாத்தில் குஞ்சுகளைப் பரமாமரித்தல் போன்றவற்றில் பெண் பறவையே ஈடுபடும். ஆண் அதில் பங்கு பெறுவதில்லை.
படங்கள்
-
செந்தலைக் கிளி பெண்
-
செந்தலைக் கிளி பெண் உணவு உட்கொள்ளும் தருணம்.
-
செந்தலைக் கிளி ஆண் உணவு உட்கொள்ளும் தருணம்.
-
செந்தலைக் கிளி பெண் உணவு உட்கொள்ளும் தருணம்.
-
செந்தலைக் கிளி ஆண் உணவு உட்கொள்ளும் தருணம்.
-
செந்தலைக் கிளிகள் கூட்டாக விளையாடும் தருணம்.
-
செந்தலைக் கிளிகள் கூட்டாக விளையாடும் தருணம்.
-
செந்தலைக் கிளி ஆண் உணவு உட்கொள்ளும் தருணம்.
-
செந்தலைக் கிளிஆண்
-
இளம் உயிரி
-
இணை
-
ஆண்
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Psittacula cyanocephala". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
{cite web}
: Invalid|ref=harv
(help) - ↑ தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம் பக்கம் எண்:68