சென் குவாங்செங்

இது ஒரு சீனப் பெயர்; இவரது குடும்பப் பெயர் சென்.

சென் குவாங்செங்
சீன எழுத்துமுறை 陳光誠
எளிய சீனம் 陈光诚
சென் குவாங்செங்
பிறப்பு12 நவம்பர் 1971 (1971-11-12) (அகவை 53)
தேசியம்சீன மக்கள் குடியரசு
கல்விசீன மருத்துவத்திற்கான நான்ஜிங் பல்கலைக்கழகம் (1998–2001)
பணிமனித உரிமைகள் செயற்பாட்டாளர்
அறியப்படுவதுகிராமப்புற வறியவர்களுக்காக செயல்பாடு
சொந்த ஊர்டோன்சிகு, சான்தோங் மாநிலம், சீனா
வாழ்க்கைத்
துணை
யுவான் வெய்ஜிங்
விருதுகள்டைம் 100 (2006)
ரமன் மக்சேசே பரிசு (2007)

சென் குவாங்செங் (பிறப்பு 12 நவம்பர் 1971) சீனாவைச் சேர்ந்த பார்வையற்றோருக்கான உரிமைகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர். சிறுவயது முதலே கண் பார்வை இழந்த சென் தாமாகவே சட்டம் படித்தவர். பெண்கள் மற்றும் வறியவர்களின் உரிமைக்காகப் போராடும் இவர் வெறுங்கால் வழக்கறிஞர் என அழைக்கப்படுகிறார். அரசின் குடும்பநலத் திட்டங்களின் பெயரில் நடைபெறும் அதிகார மீறல்களையும் கட்டாயக் கருக்கலைப்புக்களையும் எதிர்த்துப் போராடி வருகிறார்.இவர் சீனாவின் சிற்றூர்களின் நடக்கும் மனித உரிமை மீறல்களை வெளியுலகுக்கு கொண்ணர்ந்ததற்காக அறியப்படுகிறார். இவர் அமெரிக்க ரைம் இதழோடு சீனாவின் ஒரு பிள்ளை கொள்கையை விமர்சித்து, குறிப்பாக காலம் தாழ்த்திய கருக்கலைப்பை எதிர்த்துப் பேசியதால் கைது செய்யப்பட்டார். பின்னர் வேறு குற்றங்களுக்காக இவரை 4 ஆண்டுகள் சிறையில் அடைத்தனர். 2010 வெளியே வந்த இவர், சீனக் காவல்துறையின் வீட்டுக் கண்காணிப்பில் இருந்தார். 2012 ஏப்பிரல் மாதம் இவர் அமெரிக்க தூதரகத்தில் அடைக்கலம் கோரியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.[1] பின்னர் தொடர்ந்த பல்வேறு பேச்சுவார்த்தைகளின் பின்பு 2012 மே 19 ஆம் திகதி இவர் ஐக்கிய அமெரிக்காவில் வந்திறங்கினார்.

மேற்கோள்கள்