செயலியை அமல்படுத்தும் வரிசை முறை
கணிதத்தில் மற்றும் கணினி நிரலாக்கம் , செயலியை அமல்படுத்தும் வரிசை முறை (Order of operations) என்பது எந்த செயலியை எந்த வரிசையில் அமல்படுத்த வேண்டும் என்பதை விளக்க உதவும் ஒரு விதி ஆகும். உதரணமாக கணிதத்தில் மற்றும் கணினி நிரலாக்கத்தில் , பெருக்கல் செயலி கூட்டல் செயலிக்கு முன் அமல்படுத்தப்படும். 2 + 3 × 4 இதன் விடை 14. இது போன்ற சிக்கலான இடங்களில் அடைப்பு குறியை பயன்படுத்த வேண்டும்.அவை, "( ), { }, மற்றும் [ ]". மேலே குறிப்பிட்ட கணக்கை 2 + (3 × 4) என தெளிவாக குறிப்பிடலாம். இதுவே (2 + 3) × 4 என வரும் போது அதன் விடை 20 என மாறும். நவீன இயற்கணித குறியீடுகள் அறிமுகம் செய்யப்பட்ட போதும் கூட்டலுக்கு முன்பு பெருக்கல் செயலி அமல்படுத்தப்படும். இதன் காரணமாக 3 + 4 × 5 = 4 × 5 + 3 = 23. 16 ஆம் மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் அடுக்குக்குறி செயலி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு அடுக்குக்குறி , கூட்டல் மற்றும் பெருக்கல் செயலியை விட முதலிடத்தை எடுத்துக்கொண்டது. இதன் காரணமாக 3 + 52 = 28 மற்றும் 3 × 52 = 75.அடைப்பு குறிக்குள் வருவதை முதலிலும் அடுக்குக்குறியை அதன் பின்னும் அமல்படுத்த வேண்டும் (3 + 5)2 = 64.[a][b][c]
மேற்கோள்கள்
மேற்கோள்களின் முன்தோற்றம்
- ↑ For example, the third edition of Mechanics by Landau and Lifshitz contains expressions such as hPz/2π (p. 22), and the first volume of the Feynman Lectures contains expressions such as 1/2√N (p. 6–7). In both books, these expressions are written with the convention that the solidus is evaluated last.
- ↑ Some authors deliberately avoid any omission of parentheses with functions even in the case of single numerical variable or constant arguments (i.e. Oldham in Atlas), whereas other authors (like NIST) apply this notational simplification only conditionally in conjunction with specific multi-character function names (like
sin
), but don't use it with generic function names (likef
). - ↑ To avoid any ambiguity, this notational simplification for monomials is deliberately avoided in works such as Oldham's Atlas of Functions or the NIST Handbook of Mathematical Functions.