செராத்திங்

செராத்திங்
Cherating
பகாங்
ஆள்கூறுகள்: 4°07′45.4″N 103°23′13.1″E / 4.129278°N 103.386972°E / 4.129278; 103.386972
நாடு மலேசியா
மாவட்டம்குவாந்தான்
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு
25xxx
மலேசியத் தொலைபேசி எண்கள்+6-09
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்C

செராத்திங் (மலாய் மொழி: Cherating; ஆங்கிலம்: Cherating; சீனம்: 珍拉丁) என்பது மலேசியா, பகாங், குவாந்தான் மாவட்டத்தில் உள்ள ஒரு கடற்கரை நகரம். மலேசியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற கடற்கரை நகரங்களில் இந்த நகரமும் ஒன்றாகும். குவாந்தான் நகரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் இந்தக் கடற்கரை நகரம் உள்ளது.[1]

தென்சீனக் கடலை எதிர்நோக்கியவாறு அமைந்து இருக்கும் இந்தக் கடற்கரை; உலகம் முழுமைக்கும் சுற்றுலா பயணிகளால் நன்கு அறியப்பட்ட இடமாகக் கருதப்படுகிறது. மலேசியாவில் முதன்முதலில் தோற்றுவிக்கப்பட்ட சுற்றுலா தளங்களில் இதுவும் ஒன்றாகும்.

பொது

இங்குள்ள செண்டோர் கடற்கரையில் உள்ள கடற்கரைகள்; தங்கும் விடுதிகள் மற்றும் ஓய்வு விடுதிகள் போன்றவை பிரபலமான சுற்றுலா இடங்களாகக் கருதப் படுகின்றன. தென்னை மரங்கள் சூழ்ந்த வெள்ளை கடற்கரையுடன், விருந்தினர் மாளிகைகள் மற்றும் சிறு சிறு கடைகளைக் கொண்டது இந்தச் சிறிய கிராமம்.[1]

தீபகற்ப மலேசியாவில் மிகவும் விரும்பப்படும் கடலோர கடற்கரைகளில் செராத்திங் ஒன்றாகும். அருகிலுள்ள தீவுகளான பெர்கெந்தியான் தீவு, லாங் தெங்கா தீவு மற்றும் ரெடாங் தீவு ஆகியவற்றில் சுற்றுலாத் தொழில் தொடங்குவதற்கு முன்பே, செராத்திங் கடற்கரை; சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்றாக விளங்கியது.

ஆமைகள் சரணாலயம்

ரெடாங் தீவு மற்றும் பெர்கெந்தியான் தீவுகளில் உள்ள படிகத் தெளிவான வெள்ளை மணல் கடற்கரைகளுடன் செராத்திங் கடற்கரையை ஒப்பிட முடியாது என்றாலும்; செராத்திங் கடற்கரையின் எளிமை மற்றும் குறைந்த விலையிலான தங்கும் விடுதிகள் காரணமாக இந்தக் கடற்கரை பிரபலமான சுற்றுலா தலமாக உள்ளது.[2]

பாரம்பரிய உடைகள் மற்றும் கைவினைப் பொருட்களை விற்பனை செய்யும் கலாசார கிராமம் செராத்திங்கில் உள்ளது. செராத்திங் கடற்கரையில் ஆமைகள் சரணாலயம் உள்ளது. ஆமைகள் சூலை மற்றும் ஆகத்து மாதங்களில் முட்டையிடுவதற்கு கடற்கரைக்கு வருவது வழக்கம்.

காட்சியகம்

மேற்கோள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்