செலீனியம் அறுபுளோரைடு

செலீனியம் அறுபுளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
Selenium hexafluoride
வேறு பெயர்கள்
செலீனியம்(VI) புளோரைடு, செலீனியம் புளோரைடு
இனங்காட்டிகள்
7783-79-1 Y
ChemSpider 22964 N
InChI
  • InChI=1S/F6Se/c1-7(2,3,4,5)6 N
    Key: LMDVZDMBPZVAIV-UHFFFAOYSA-N N
  • InChI=1S/F6Se/c1-7(2,3,4,5)6
    Key: LMDVZDMBPZVAIV-UHFFFAOYAP
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24558
வே.ந.வி.ப எண் VS9450000
  • F[Se](F)(F)(F)(F)F
UNII H91D37I668 Y
பண்புகள்
SeF6
வாய்ப்பாட்டு எடை 192.9534 கி/மோல்
தோற்றம் நிறமற்ற வாயு
அடர்த்தி 0.007887 கி/செ.மி3[1]
உருகுநிலை −39 °C (−38 °F; 234 K)
கொதிநிலை −34.5 °C (−30.1 °F; 238.7 K) பதங்கமாகும்
கரையாது
ஆவியமுக்கம் >1 வளிமண்டல அழுத்தம் (20°செல்சியசு)[2]
−51.0·10−6 cm3/mol
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.895
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம், oP28
புறவெளித் தொகுதி Pnma, No. 62
ஒருங்கிணைவு
வடிவியல்
எண்முகம் (Oh)
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 0
வெப்பவேதியியல்
Std enthalpy offormation ΔfHo298 -1030 கியூல்/மோல்[3]
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் நச்சு,அரிக்கும்
Lethal dose or concentration (LD, LC):
LCLo (Lowest published)
மில்லியனுக்கு 10 பகுதிகள் (எலி, 1 மணி)
மில்லியனுக்கு 10 பகுதிகள் (சுண்டெலி, 1 மணி)
மில்லியனுக்கு 10 பகுதிகள் (கினியா பன்றி, 1 மணி)[4]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
தாங்கும் அளவு மில்லியனுக்கு 0.05 பகுதிகள் (0.4 மி.கி/மீ3)[2]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
தாங்கும் அளவு மில்லியனுக்கு 0.05 பகுதிகள்[2]
உடனடி அபாயம்
2 ppm[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

செலீனியம் அறுபுளோரைடு (Selenium hexafluoride) என்பது SeF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மிகவும் நச்சுத்தன்மை கொண்ட இச்சேர்மம் நிறமற்ற வாயுநிலையில் காணப்படுகிறது. விரும்பத்தகாத நாற்றம் கொண்டதாகவும் பரவலான பயன்பாடுகளும் வணிகப் பயன்பாடுகளும் அற்றதாகவும் உள்ளது.[5] It is not widely encountered and has no commercial applications.[6]

கட்டமைப்பு

Se−F பிணைப்புகளின் பிணைப்பு நீளம் 168.8 பைக்கோமீட்டர் ஆக உள்ள எண்முக மூலக்கூற்று வடிவத்தில் SeF6 சேர்மம் படிகமாகிறது. பிணைப்பைப் பொறுத்தவரை, இதன் பிணைப்பு மியிணைதிற பிணைப்பு என கருதப்படுகிறது.

தயாரிப்பு

தனிமங்களில் இருந்து இதை தயாரிக்கலாம். [7] செலீனியம் டை ஆக்சைடுடன் புரோமின் முப்புளோரைடு (BrF3) சேர்த்து வினைபுரியச் செய்தால் செலீனியம் அறுபுளோரைடு உருவாகிறது. வினையில் உருவாகும் சேர்மம் பதங்கமாதல் மூலம் சுத்திகரிக்கப்படுகிறது.

வேதிப்பண்புகள்

S, Se மற்றும் Te தனிமங்களின் அறுபுளோரைடுகளின் ஒப்பீட்டு வினைத்திறன் TeF6 > SeF6 > SF6 என்ற வரிசையைப் பின்பற்றுகிறது. பிந்தையதாக உள்ள SF6 அதிக வெப்பநிலை வரை நீராற்பகுப்பு வினையில் முற்றிலும் செயலற்றதாகும். செலீனியம் அறுபுளோரைடும் நீராற்பகுப்பை எதிர்க்கிறது. இவ்வாயுவை எந்தவிதமான மாற்றமுமின்றி 10% NaOH அல்லது KOH வழியாக அனுப்ப முடியும், ஆனால் 200 ° செல்சியசு வெப்பநிலையில் இவ்வாயு அம்மோனியாவுடன் வினைபுரிகிறது.[8]

பாதுகாப்பு

செலீனியம் அறுபுளோரைடு மிகவும் செயலற்றது என்றாலும் நீராற்பகுப்பு வினையில் மெதுவாக இருந்தாலும், குறைந்த செறிவுகளில் கூட நச்சுத்தன்மை வாய்ந்ததாக உள்ளது. குறிப்பாக, நீண்ட நேரம் வெளிப்பட்டாலும் இந்நச்சு பாதிப்பு இருக்கும்.[9] அமெரிக்காவில் செலீனியம் அறுபுளோரைடு வெளிப்பாட்டிற்கான தரநிலைகள் எட்டு மணி நேர வேலை மாற்றத்தில் சராசரியாக காற்றில் மில்லியனுக்கு 0.05 பகுதிகள் என்ற உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, செலினியம் அறுபுளோரைடின் உயிருக்கும் ஆரோக்கியத்துக்குமான உடனடி ஆபத்து மதிப்பளவு மில்லியனுக்கு அதிகபட்சம் 2 பகுதிகள் வரை அனுமதிக்கப்படுகிறது..[10]

மேற்கோள்கள்

  1. Lide, D. R., ed. (2005). CRC Handbook of Chemistry and Physics (86th ed.). Boca Raton (FL): CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0486-5.
  2. 2.0 2.1 2.2 2.3 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0551". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  3. Wiberg, E.; Holleman, A. F. (2001). Inorganic Chemistry. Elsevier. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5.
  4. "Selenium hexafluoride". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
  5. "Material Safety" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2010-07-24.
  6. Langner, B. E. (2005), "Selenium and Selenium Compounds", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a23_525
  7. Yost, D. M.; Simons, J. H. (1939). "Sulfur, Selenium, and Tellurium Hexafluorides". Inorganic Syntheses. Vol. 1. pp. 121–122. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470132326.ch44. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780470132326.
  8. "Selenium-Inorganic Chemistry". Encyclopedia of Inorganic Chemistry. (1994). Ed. King, R. B.. John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-93620-0. 
  9. "Medical Management Guidelines for Selenium Hexafluoride (SeF6)". CDC ATSDR. Archived from the original on May 28, 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-07-24.
  10. Documentation for Immediately Dangerous To Life or Health Concentrations (IDLHs)