செல் பயர்பாக்சு

மொஸிலா பயர்பாக்ஸ் - செல் பதிப்பு
உருவாக்குனர்ஜான் டி ஹாலர்
அண்மை வெளியீடுபயர்பாக்ஸ் 3.0.7 ஐப் பின்பற்றி / 05 மார்ச், 2009
இயக்கு முறைமைவின்டோஸ், லினக்ஸ் மற்றும் வைன்
மென்பொருள் வகைமைஇணைய உலாவி
உரிமம்MPL, MPL/GPL/LGPL tri-license
இணையத்தளம்Firefox Portable Website

செல்லுமிடம் எல்லாம் எடுத்துச் செல்லக்கூடிய செல் பயர்பாக்ஸ் அதாவது காவக்கூடிய பயர்பாக்ஸ் (போட்டபிள் எடிசன் - Portable Edition). ஜான் T. ஹாலரினால் மீள் பொதிசெய்யப்பட்ட பயர்பாக்ஸ் பதிப்பாகும். இந்தப் பயர்பாக்ஸ் பதிப்பானது இறுகுவட்டு யுஎஸ்பி பிளாஸ்டிஸ்க் ஊடக விண்டோஸ் கணினிகளிலும் மற்றும் லினக்ஸ்/யுனிக்ஸ் ஆப்பிள் மாக் ஓஸ் இயங்குதளங்களில் வைன் ஊடாகவும் இயங்கக் கூடியது. இந்தப் பதிப்பானது கணினியில் பயர்பாக்ஸ்ஸை நிறுவவேண்டிய அவசியம் இல்லை அத்துடன் நிறுவியுள்ள பயர் பாக்ஸ் உடனும் எந்தவிதத்திலும் இடையூறை உண்டுபண்ணாது. முக்கியமாக பிரத்தியேகத் தன்மையான விடயங்களை அக்கணினியில் விடாமல் நீங்கள் தூக்கிக் கொண்டே திரியக் கூடிய வசதிகளை அளிக்கின்றது. தவிர அலுவலக வலையமைப்புக்களில் உங்களிற்கு கணினியின் மென்பொருளை நிறுவும் வசதிகள் தரப்படாவிட்டாலோ அல்லது மறுக்கப்படிருந்தால் கூட இப்பதிப்பினைப் பயன்படுத்தலாம்.

மாறுதல்கள்

இது மொஸிலா பயர்பாக்ஸ் போன்றே நீட்சிகள் மற்றும் உலாவியின் மேம்படுத்தல்களை ஆதரிக்கின்றது. எனினும் மாறுதல்கள் சில செய்யப்பட்டு யுஎஸ்பி பிளாஷ் டிஸ்குகளில் வாழ்நாளினைக் குறைக்காவண்ணம் அடிக்கடி எழுதி எழுதி அழிப்பது இல்லாமற் செய்யப்பட்டுள்ளது. இதில் உலாவியின் காஷ் என்னும் தற்காலிக சேமிப்பு மற்று உலாவியின் பார்க்கப்பட்ட பக்கங்களின் வரலாறும் செல் பயர்பாக்ஸில் இருந்து வெளிவந்ததும் இல்லாமற் செய்யப்பட்டுள்ளது (அழிக்கப்படும்). இணையத்தை உலாவரும்போது பதிவிறக்கப்படும் குக்கீஸ் (மென்பொருள்) உலாவியை நிறுத்தியதும் அழிக்கப்படும். இவை விருப்பத் தேர்வுகளூடாக மாற்றக் கூடியனவேயெனினும் அவ்வாறு செய்வதானது யுஎஸ்பி டிஸ்குகளின் வாழ்நாளினைக் குறைத்துவிடும்.

பிரத்தியேக சேமிப்புக்களாகப் புத்தகக் குறிப்பு, சேர்ந்து இயங்கும் அடோப் (முனைநாள் மக்ரோமீடியா) பிளாஷ் (flash) ஷாக்வேவ் (Shockwave) மற்றும் தீம்ஸ் (Themes) ஆகியவை பிளாஷ் டிஸ்க்கிலேயே சேமிக்கப்படும். பல்வேறு பட்ட பாவனையாளர்களிற்கு பயர்பாக்ஸ்ஸை விளக்குவதற்கும் இதனைப் பயன் படுத்தலாம்.

பதிப்புக்கள்

இதன் 2.0 பதிப்பானது 20 நவம்பர் 2006 இல் வெளிவந்தது. இது விண்டோஸ் 95, விண்டோஸ் 98, விண்டோஸ் மில்லேனியம், விண்டோஸ் 2000 ,விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் விஸ்டா ஆகியவற்றுடன் ஒத்தியங்கக் கூடியது.

வசதிகள்

  • நீட்சி - சினேகப்பூர்வமான ஆரம்பம் - செல் பயர்பாக்ஸ் ஆரம்பிப்பான் 1.0.8 இப்போது உள்ளடக்கப்பட்டுள்ளது. இது நிறுவப்பட்டுள்ள நீட்சிகளை செல்பயர்பாக்ஸ் நிறுவப்பட்டுள்ள இடத்திற்குச் சார்பாக மாற்றிக்கொள்ளும்.
  • எந்த உலாவி தேர்ந்தெடுக்கப்படுள்ளது என்பதைச் சோதிக்காது - செல் பயர்பாக்ஸ் ஆரம்பிக்கும் போது கணினியில் எந்த உலாவி இணையத்தை அணுகுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்படுள்ளது என்பதைச் சோதிக்காது.
  • பதிவிறக்கத்தைச் சேமிக்கும் இடத்தைக் கேட்டறிதல் - செல்பயர்பாக்ஸ் எவ்விடத்தில் இணையத்தில் உள்ள கோப்பொன்றினைச் சேமிக்கும் பொழுது எவ்விடத்தில் சேமிக்கப் போகின்றீர்கள் என்று பயனரிடம் கோரி பயனரின் விரும்பும் இடத்தில் சேமிக்கும்.
  • பதிவிறக்கச் சரித்திரம் அழிக்கப்படும் - செல்பயர்பாக்ஸை விட்டு நீங்கும் போது பதிவிறக்கச் சரித்திரம் அழிக்கப்பட்டு விடும்.
  • உலாவிய சரித்திரம் சேமிக்கப்படமாட்டாது - செல்பயர்பாக்ஸ் இணையத் தளங்களைப் பார்த்த சரித்திரமானது அதை விட்டு நீங்கியது அழிக்கப்பட்டுவிடும்.
  • போம்களில் (Forms) வழங்கும் தகவல்கள் சேமிக்கப்படமாட்டா - போம்கள் தொடர்பான தகவல்கள் ஏதும் சேமிக்கப்படமாட்டாது.
  • டிஸ்க் காஷ் (Disk Cache) எதுவும் கிடையாது - யுஎஸ்பி பிளாஷ் டிஸ்களின் வாழ்நாளினைக் குறைக்காவண்ணம் டிஸ்களில் எழுதி எழுதி அழிக்கும் பயர்பாக்ஸின் பண்பானது செல்பயர்பாக்ஸில் செயலிழக்கப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்