சேலக்கரை சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் ஒன்று. இது திருச்சூர் மாவட்டத்தில் உள்ள தலப்பிள்ளி வட்டத்திற்கு உட்பட்ட ஊர்களைக் கொண்டது. சேலக்கரை, தேசமங்கலம்,
கொண்டாழி, முள்ளூர்க்கரை, பாஞ்ஞாள், பழயன்னூர், திருவில்வாமலை,
வள்ளத்தோள் நகர், வரவூர் ஆகிய ஊராட்சிகளைக் கொண்டுள்ளது. [1].