சைக்ஸ்-பிகாட் ஒப்பந்தம்
சைக்ஸ்-பிகாட் ஒப்பந்தம் என்பது 1916ல் இங்கிலாந்திற்கும் பிரான்சிற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட இரகசிய உடன்படிக்கை. முதலாம் உலகப்போரில் ஓட்டோமான் சாமுராஜ்யம் தோற்றால் அதன்பின் அதன் மாகாணங்களை எவ்வாறு தங்களுக்குள் பிரித்து கொள்ளலாம் என்பதே இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம்.[1][2][3]
இந்த ஒப்பந்தம் அரேபிய தீபகற்பத்திற்கு வெளியே உள்ள ஒட்டோமான் மாகாணங்களை பிரித்தானியாவும் பிரெஞ்சும் கட்டுப்பாடன, செல்வாக்குள்ள பகுதிகளாக திறம்பட பிரித்தது. இந்த ஒப்பந்தம் இன்றுள்ள தெற்கு இஸ்ரேல்,பாலஸ்தீனம், ஜோர்டான் , தெற்கு ஈராக் ஆகிய பகுதிகளை இங்கிலாந்தின் கட்டுப்பாட்டிற்கு ஒதுக்கியது.தென்கிழக்கு துருக்கி, வடக்கு ஈராக், சிரியா மற்றும் லெபனானை பிரான்ஸ் கட்டுப்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டது.
மேற்கோள்கள்
- ↑ Fromkin, David (1989). A Peace to End All Peace: The Fall of the Ottoman Empire and the Creation of the Modern Middle East. New York: Owl. pp. 286, 288. ISBN 978-0-8050-6884-9.
- ↑ Martin Sicker (2001). The Middle East in the Twentieth Century. Greenwood Publishing Group. p. 26. ISBN 978-0275968939. Retrieved July 4, 2016 – via Google Books.
- ↑ "International Boundary Study; Jordan – Syria Boundary" (PDF). Archived from the original (PDF) on 2009-03-27. Retrieved 2009-05-08. p. 8.