சொற்பொருள் விருத்தி
சொற்பொருளியலில் சொற்பொருள் விருத்தி (Semantic progression) என்பது, சொற்களின் பயன்பாட்டில் ஏற்படுகின்ற படிமுறை மாற்றங்களைக் குறிக்கிறது. தற்காலத்தில் பயன்பாட்டிலுள்ள சொற்கள் பல அவற்றின் தொடக்ககாலப் பொருள்களினின்றும் வேறுபட்ட பொருள்களைக் குறித்து நிற்பதைக் காணலாம். இதற்குக் காரணம் சொற்பொருள் விருத்தி ஆகும்.