சோ. ரா. பொம்மை
சோ. இரா. பொம்மை | |
---|---|
கல்வித்துறை அமைச்சர் | |
பதவியில் ஜூன் 5, 1996 – மார்ச் 19, 1998 | |
பிரதமர் | தேவ கௌடா ஐ. கே. குஜரால் |
முன்னையவர் | அடல் பிகாரி வாச்பாய் |
பின்னவர் | முரளி மனோகர் ஜோஷி |
11-வது முதலமைச்சர், கர்நாடக அரசு | |
பதவியில் ஆகஸ்ட் 13, 1988 – ஏப்ரல் 21, 1989 | |
ஆளுநர் | பி. வெங்கடசுப்பையா |
முன்னையவர் | இராமகிருஷ்ண மகாபலேஷ்வர் ஹெக்டே |
பின்னவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
Member of the ஹூப்ளி சட்டமன்றத் தொகுதி சட்டமன்றம் ஹூப்ளி | |
பதவியில் 1978–1989 | |
முன்னையவர் | ஜி. இரங்கசாமி சந்திரா |
பின்னவர் | ஜி. இரங்கசாமி சந்திரா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கரதகி, சிக்கான் (தற்போது ஆவேரி மாவட்டம்), மைசூர் அரசு, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் | 6 சூன் 1924
இறப்பு | 10 அக்டோபர் 2007 பெங்களூர், கருநாடகம், இந்தியா | (அகவை 83)
அரசியல் கட்சி | ஜனதா கட்சி |
துணைவர் | கங்கம்மா |
பிள்ளைகள் | 4; பசவராஜ் பொம்மை உட்பட |
சோமப்பா இராயப்பா பொம்மை (S R Bommai) (6 ஜூன் 1924 - 10 அக்டோபர் 2007) கருநாடகத்தின் 11 வது முதல்வராக இருந்த ஜனதா தளம் கட்சியின் அரசியல்வாதி ஆவார். 1996 முதல் 1998 வரை ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் கல்வித் துறை அமைச்சராகவும் இருந்தார்.[1]
பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இவரது மகன் பசவராஜ் பொம்மை 28 சூலை 2021 முதல் கர்நாடக மாநில முதலமைச்சராக உள்ளார்.
வாழ்க்கை
இவர் 6 ஜூன் 1924இல் சதார் லிங்காயத் குடும்பத்தில் பிறந்தார். இவர் 1942ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டார். பிரித்தானிய ஆட்சியின் போது மைசூர் இராச்சியம், மும்பை பிரசிடென்சி, ஹைதராபாத் மற்றும் மெட்ராஸ் பிரசிடென்சி எனப் பிரிக்கப்பட்டிருந்தததை கருநாடகாவாக ஒன்றிணைத்ததில் இவர் முக்கிய பங்கைக் கொண்டிருந்தார்.[2]
தொழில் முறை வழக்கறிஞராக இருந்த இவர், ஹுப்பல்லி கிராமப்புறத் தொகுதியிலிருந்து பல முறை கர்நாடக சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் 1972 முதல் 1978 வரை கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்தார்.
இவர் அக்டோபர் 10, 2007 அன்று, 84 வயதில் இறந்தார். [3] இவரது மகன், எம். எஸ். பொம்மாயி பெங்களூரில் உள்ள தொழிலதிபர் ஆவார். மற்றொரு மகனான பசவராஜ் பொம்மாய் 2008ல் பாரதிய ஜனதா கட்சி அரசாங்கத்தில் அமைச்சரானார்.
மேற்கோள்கள்
- ↑ "List of former Ministers in charge of Education/HRD". Government of India. Archived from the original on 2014-10-18. பார்க்கப்பட்ட நாள் 2021-03-19.
- ↑ "Bommai receives Ekikarana Award". The Hindu. 10 January 2007 இம் மூலத்தில் இருந்து 1 அக்டோபர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071001011111/http://www.hindu.com/2007/01/10/stories/2007011008050500.htm.
- ↑ "S R Bommai passes away". The Times of India. 11 October 2007 இம் மூலத்தில் இருந்து 2013-12-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131203063038/http://articles.timesofindia.indiatimes.com/2007-10-11/bangalore/27968920_1_s-r-bommai-janata-parivar-union-minister.