ஜமதக்கினி
ஜமதக்கினி | |
---|---|
சமதக்கினி முனிவர், கார்த்தவீரிய அருச்சுனனின் கொடுஞ் செயலை பரசுராமரிடம் கூற பரசுராமர் கார்த்தவீரிய அருச்சுன் தலையை தனது கோடாரியால் துண்டித்தார் | |
தகவல் | |
துணைவர்(கள்) | ரேணுகா |
பிள்ளைகள் | வசு, விசுவா வசு, பிருகத்யானு, பிருத்வான்கண்வர் மற்றும் இராமபத்திரன் எனும் பரசுராமர் |
சமதக்கினி (Jamadagni) சமக்கிருதம்: जमदग्नि), இந்து தொன்மவியலின் படி சப்த ரிசிகளில் ஒருவரும், விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமரின் தந்தையும், ரேணுகாவின் கணவரும் ஆவார்.[1] சமதக்கினி முனிவரின் ஐந்து மகன்கள் வசு, விசுவா வசு, பிருகத்யானு, பிருத்வான்கண்வர் மற்றும் இராமபத்திரன் எனும் பரசுராமர் ஆவர்.
இளமை
பிருகுவின் வழித்தோன்றலான சமதக்கினி முனிவர், ரிசிக முனிவருக்கும், மன்னர் காதியின் மகள் சத்தியவதிக்கும் பிறந்தவர்.[2] சமதக்கினி என்பதற்கு நெருப்பு என பொருள்படும். வேதமனைத்தும் கற்ற சமதக்கினி, பிரசினசித்து என்ற சூரிய குல மன்னர் மகளான ரேணுகாவை மணந்து, வசு, விசுவா வசு, பிருகத்யானு, பிருத்வான்கண்வர் மற்றும் பரசுராமர் ஆகிய ஐந்து குழந்தைகளின் தந்தையானார்.[2][3][4]
ரேணுகாவை கொல்லுதல்
ரேணுகா தன் பதிபக்தியின் மேன்மையால், நாள்தோறும் பச்சைக் களிமண் பானையில் ஆற்று நீரை எடுத்து வருவாள்.
ஒரு நாள் ஆற்றுக்குச் சென்று களிமண் பானையில் நீர் எடுக்கையில், வானத்தில் தேரில் ஏறி வந்த அழகிய கந்தவர்களைக் கண்டு சில நொடிப் பொழுது வரை மயங்கினாள். இதனால் அவளது கற்புக்குக் களங்கம் ஏற்பட்டதால், பச்சைக் களிமண் உடைந்தது. எனவே வீட்டிற்கு திரும்பாமல் ஆற்றங்கரையிலே சமதக்கினி முனிவரின் வருகைக்காகக் காத்திருந்தாள்.
ஆற்றங்கரையில் நடந்த நிகழ்வுகளை ஞானக்கண்ணால் உணர்ந்து, கோபமுற்ற சமதக்கினி முனிவர், ரேணுகாவை வெட்டிக் கொல்ல தன் மூத்த மகன்களுக்கு ஆணையிட்டார். அவர்கள் மறுக்கவே, அவர்களைக் கல்லாகப் போகும்படி சபித்தார். தன் கடைசி மகன் பரசுராமர் முன்வந்து, தந்தையின் ஆணைக்கிணங்க, தனது தாயைக் கோடாரியால் வெட்டித் தலையைத் துண்டித்தார்.
பின்னர் அமைதியடைந்த சமதக்கினி, பரசுராமருக்கு வழங்கிய வரங்களின் படி ரேணுகாவின் துண்டிக்கப்பட்ட தலை, உடலுடன் இணைந்து உயிர் பெற்றாள். கல்லான மூத்த சகோதர்கள் மீண்டும் உயிர் பெற்றனர்.
இறப்பு
ஒரு முறை ஆயிரம் கரங்கள் கொண்ட ஏயேய நாட்டு மன்னர் கார்த்தவீரிய அருச்சுனன், சமதக்கினி முனிவரின் ஆசிரமத்திற்கு வந்தார். சமதக்கினி வளர்த்துக் கொண்டிருந்த காமதேனுவின் மகளான சபலை எனும் தெய்வீகப் பசுவவை கார்த்தவீரிய அருச்சுனன் கேட்டார். தர மறுக்கவே, சமதக்கினி முனிவரிடமிருந்து வலுக்கட்டாயமாக சபலை பசுவை கவர்ந்து சென்றான்.
இச்செய்தியை சமதக்கினி முனிவர் பரசுராமரிடம் தெரிவித்தார். கோபமுற்ற பரசுராமர் கார்த்தவீரிய அருச்சுனனை தனது கோடாரியால் தலையைத் துண்டித்தார். பழிக்குப் பழியாக கார்த்தவீரிய அருச்சனனின் மூன்று மகன்கள், பரசுராமர் ஆசிரமத்தில் இல்லாத நேரத்தில், சமதக்கினி முனிவரைக் கொன்றனர். இதனால் கோபமுற்ற பரசுராமர், சத்திரிய மன்னர்களின் 21 தலைமுறையினரின் தலைகளைத் தனது கோடாரியால் சீவிக் கொல்வதாக சபதமெடுத்தார்.
மேற்கோள்கள்
- ↑ Avalon, Arthur (Sir John Woodroffe) (1913, reprint 1972) (tr.) Tantra of the Great Liberation (Mahāanirvāna Tantra), New York: Dover Publications, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-486-20150-3, p. xli: The Rishi are seers who know, and by their knowledge are the makers of shastra and "see" all mantras. The word comes from the root rish Rishati-prāpnoti sarvvang mantrang jnānena pashyati sangsārapārangvā, etc. The seven great Rishi or saptarshi of the first manvantara are Marichi, Atri, Angiras, Pulaha, Kratu, Pulastya, and Vashishtha. In other manvantara there are other sapta-rshi. In the present manvantara the seven are Kashyapa, Atri, Vashishtha, Vishvamitra, Gautama, Jamdagnini, Bharadvaja. To the Rishi the Vedas were revealed. Vyasa taught the Rigveda so revealed to Paila, the Yajurveda to Vaishampayana, the Samaveda to Jaimini, Atharvaveda to Samantu, and Itihasa and Purana to Suta. The three chief classes of Rishi are the Brahmarshi, born of the mind of Brahma, the Devarshi of lower rank, and Rajarshi or Kings who became Rishis through their knowledge and austerities, such as Janaka, Ritaparna, etc. Thc Shrutarshi are makers of Shastras, as Sushruta. The Kandarshi are of the Karmakanda, such as Jaimini.
- ↑ 2.0 2.1 Subodh Kapoor (2004). A Dictionary of Hinduism: Including Its Mythology, Religion, History, Literature, and Pantheon. Cosmo Publications. pp. 185–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7755-874-6.
- ↑ George Mason Williams (2003). Handbook of Hindu Mythology. ABC-CLIO. pp. 160–161. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57607-106-9.
- ↑ Yves Bonnefoy; Wendy Doniger (1993). Asian Mythologies. University of Chicago Press. pp. 82–83. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-226-06456-7.