ஜாத் கங்கை

ஜாத் கங்கை

ஜாத் கங்கை (Jadh Ganga)(இந்தி: जाध गंगा ) என்று அழைக்கப்படும் ஆறு, ஜானவி ஆறு எனவும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் உத்தர காண்டம் மாநிலத்தில் உள்ள பாகீரதி ஆற்றின் துணை ஆறாகும்.

ஆற்றோட்டம்

ஜாத் கங்கை திபெத்து, சீனா பகுதியான ஜந்தா கவுண்டியில் மணா கணவாய்க்கு வடக்கே உற்பத்தியாகிறது. இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள பைரோங்காட்டியில் பாகீரதி ஆற்றுடன் ஜாத் கங்கை சங்கமிக்கிறது.

பிராந்திய தகராறு

ஜாத் கங்கா பள்ளத்தாக்கு சீனாவால் உரிமை கோரப்படுகிறது. ஆனால் ஜாத் கங்கா ஆற்றினை முழுமையாக இந்தியர்கள் பயன்படுத்துவதன் மூலம் கட்டுப்படுத்துகிறார்கள்.

இப்பகுதியில் உள்ள சில கிராமங்கள் சாங், ஜாதாங், நெலாங் மற்றும் பூலம் சும்தா ஆகும். இவை அனைத்தும் ஜாத் கங்கா பள்ளத்தாக்கில் அமைந்துள்ளன.[1]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "India's border dispute with neighbors". aa.com.tr. Retrieved 2020-07-18.