ஜான் வாலிஸ்

ஜான் வாலிஸ்
பிறப்பு3 டிசம்பர் 1616
ஆசு போர்டு கென்ட், இங்கிலாந்து
இறப்பு28 October 1703
ஆக்சுபோர்டு,
ஆக்சுபோர்டுசைர்,
இங்கிலாந்து
தேசியம்ஆங்கிலேயர்
துறைகணிதம்
பணியிடங்கள்குயின்சு கல்லூரி,
கேம்பிரிட்ச்
கல்விபெல்சுடல் பள்ளி, இமானுவேல் கல்லூரி,
கேம்பிரிட்ச்
கற்கை ஆலோசகர்கள்வில்லியம் அவுட்ரெட்
குறிப்பிடத்தக்க மாணவர்கள்வில்லியம் பிரௌன்கர்
அறியப்படுவதுவாலிஸ் தயாரிப்பு
முடிவிலி
உந்தம்[1]

ஜான் வாலிஸ் (John Wallis) என்பார் 1616 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி முதல் 1703 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி வரை வாழ்ந்த ஆங்கில மதகுருவும் மற்றும் கணிதவியலாளரும் ஆவார்.[2] இவர் நுண்கணிதத்தின் வளர்ச்சிக்கு ஓரளவு பாடுபட்டுள்ளார்.

இவர் 1643 ஆம் ஆண்டு முதல் 1689 ஆம் ஆண்டு வரை பாராளுமன்றத்திற்கும் பின்னர் அரசவைக்கும் தலைமை குறியாக்கவியலாளராக பணியாற்றினார்.[3] முடிவிலியின் கருத்தை பிரதிநிதித்துவப்படுத்த ∞ என்ற குறியீட்டை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்.அவர் இதேபோல் எல்லையற்ற என்பதற்க்கு 1/∞ ஐப் பயன்படுத்தினார். ஜான் வாலிஸ் நியூட்டனின் சமகாலத்தவர் ஆவார். இவர் கணிதத்தின் ஆரம்பகால மறுமலர்ச்சியின் மிகச்சிறந்த அறிவுஜீவிகளில் ஒருவர் ஆவார்.[4]

மேற்கோள்கள்

  1. Joseph Frederick Scott, The mathematical work of John Wallis (1616-1703), Taylor and Francis, 1938, p. 109.
  2. Random House Dictionary.
  3. David Eugene Smith (1917). "John Wallis As a Cryptographer". Bulletin of the American Mathematical Society 24 (2): 82–96. doi:10.1090/s0002-9904-1917-03015-7. 
  4. Kearns, D. A. (1958). "John Wallis and complex numbers". The Mathematics Teacher 51 (5): 373–374. https://archive.org/details/sim_mathematics-teacher_1958-05_51_5/page/373. 

கூடுதல் ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஜான் வாலிஸ்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.