ஜான் மார்ஷல் (தொல்பொருள் ஆய்வாளர்)

ஜான் மார்ஷல்
பிறப்பு(1876-03-19)19 மார்ச்சு 1876
செஸ்டர், இங்கிலாந்து
இறப்பு17 ஆகத்து 1958(1958-08-17) (அகவை 82)
கில்டுபோர்டு, இங்கிலாந்து
குடியுரிமைபிரித்தானியர்
தேசியம்பிரித்தானியர்
துறைவரலாறு, தொல்லியல்
பணியிடங்கள்இந்தியத் தொல்லியல் ஆய்வகம்
அறியப்படுவதுஅரப்பா, மொகெஞ்சதாரோ, சாஞ்சி, சாரநாத், தட்சசீலம், மற்றும் நோசசஸ் (கிரீட் தீவு) அகழ்வாய்வுகள்
தாக்கம் 
செலுத்தியோர்
ஜேம்ஸ் பின்செப், எச். எச். வில்சன், ஹென்றி தாமஸ் கோலின்புரூக், கோலின் மெக்கன்சி மற்றும் வில்லியம் ஜோன்ஸ்
விருதுகள்Knighthood (1914)

சர் ஜான் ஹுபர்ட் மார்ஷல் (Sir John Hubert Marshall), (19 மார்ச் 1876 - 17 ஆகஸ்டு 1958), பிரித்தானிய இந்தியாவின் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநராக 1902 முதல் 1928 முடிய பணியாற்றியவர்.[1] அரப்பா மற்றும் மொகெஞ்சதாரோ போன்ற தொல்லியல் களங்களில் அகழ்வாய்வுகள் மேற்கொண்டு சிந்து வெளி நாகரீகத்தை வெளிப்படுத்தியவர்.

வரலாறு

ஜான் மார்ஷல் 1913ல் தட்சசீலத்தில் முதலில் தொல்லியல் அகழ்வாய்வுகளை மேற்கொண்டார். 1918ல் தொல்லியல் அகழ்வாய்வில் கண்டெடுத்த தொல்பொருட்களைக் கொண்டு தட்சசீலத்தில் தொல்லியல் அருங்காட்சியகத்தை அமைத்தார்.[2] பின்னர் சாஞ்சி மற்றும் சாரநாத் பௌத்த தொல்லியல் களங்களில் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டார்.

ஜான் மார்ஷல், சிந்து வெளி நாகரீகம் மற்றும் மௌரியப் பேரரசர் அசோகர் காலம் குறித்தான ஆவணங்களை ஆதாரங்களுடன் வெளியிட்டார். இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் முதல் தலைமை இயக்குநராக அலெக்சாண்டார் கன்னிங்காமின் வழிகாட்டுதலின்படி ஜான் மார்ஷல், 1920ல் அரப்பா மற்றும் மொகெஞ்சதாரோவில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) அகழாய்வுகள் மேற்கொண்டார்.

தொல்லியல் அறிஞர்களான ஆர். டி. பானர்ஜி மற்றும் தயாராம் சகானி ஆகியோர்களுடன் இணைந்து, ஜான் மார்ஷல் அரப்பா தொல்லியல் களத்தை முதலில் அகழ்வாய்வு செய்தார். 1922ல் மொகெஞ்சதாரோ தொல்லியல் களத்தை அகழாய்வு செய்தார்.

இத்தொல்லியல் அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களைக் கொண்டு, கிமு 2600 - 1700 காலத்திய சிந்து வெளி நாகரீக காலத்தின் பண்பாடு, நாகரீகம் மற்றும் எழுத்து முறைகளை 20 செப்டம்பர் 1924 அன்று ஆவணமாக வெளியிட்டார்.[3]

திட்டமிட்ட நகரமான மொகெஞ்சதாரோவின் அதிநவீன குழாய்கள் பொருத்தப்பட்ட குளியல் அறைகள் பொதுக் குளிப்பிடங்கள் குறித்தும் ஆதாரங்களுடன் வெளியிட்டார்.

ஜான் மார்ஷல் தற்கால பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சோர் தம்ப் எனுமிடத்தில் அகழாய்வு மேற்கொண்டு, வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய மட்பாண்டங்களை கண்டெடுத்தார்.[4]

படைப்புகள்

  • Marshall, John H. (1960). A Guide to Taxila (4th ed.). Cambridge: Cambridge University Press.
  • Marshall, John H.; M. B. Garde (1927). The Bagh Caves in the Gwalior State. London: The India Society.
  • Marshall, John H.; Foucher, Alfred. The Monuments of Sanchi (3 vol.).
  • Marshall, John H. (1918). A Guide to Sanchi. Calcutta: Superintendent, Government Printing.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

முன்னர் தலைமை இயக்குநர்
இந்தியத் தொல்லியல் ஆய்வகம்

1902 - 1928
பின்னர்