ஜியார்ஜ் வான் பியூயர்பக்
ஜியார்ஜ் வான் பியூயர்பக் Georg von Peuerbach | |
---|---|
ஜியார்ஜ் வான் பியூயர்பக்: Theoricarum novarum planetarum testus, பாரீசு, 1515 | |
பிறப்பு | பியூயர்பக் , இலிஞ்சு அருகில் | மே 30, 1423
இறப்பு | ஏப்ரல் 8, 1461 வியன்னா | (அகவை 37)
தேசியம் | ஆத்திரியர் |
துறை | வானியல் |
பணியிடங்கள் | வியன்னா பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | வியன்னா பல்கலைக்கழகம் |
குறிப்பிடத்தக்க மாணவர்கள் | இரெகியோமொண்டனசு |
ஜியார்ஜ் வான் பியூயர்பக் (Georg von Peuerbach) ( புர்பக் (Purbach), பியூர்பக், (Peurbach), பர்பக்கியசு (Purbachius)) (பிறப்பு: மே 30, 1423 –ஏப்பிரல் 8, 1461) ஓர் ஆத்திரிய வானியலாளரும் கணிதவியலாளரும் கருவி உருவாக்குநரும் ஆவார். இவர் தாலமிய வானியலை (Theoricae Novae Planetarum.) ஆற்றொழுக்காக அறிமுகப்படுத்தி பெயர்பெற்றவர்.
வாழ்க்கை
இவர் 1446 இல் வியன்னா பல்கலைக்கழகத்தில் சேர்ந்ததற்கு முந்திய வாழ்க்கையைப் பற்றிய தகவல் ஏதும் கிடைக்கவில்லை.[1] 1448 இல் இளங்கலைப் பட்டம் பெற்றார். இளங்கலைப் பட்டப்படிப்பில் அவருக்குப் பெரும்பான்மை பாடங்கள் மானுடவியலாகவே இருந்தது.[2] இவர் வியன்னாவில் சேர்ந்தபோது அங்கு வானியல் பேராசிரியர் யாரும் இல்லை என்பதால் இவர் வானியலை தானே கற்றிருக்கவேண்டும்.[2]
குறிப்புகள்
- ↑ Shank, Michael. "Georg von Peuerbach". Encyclopaedia Britannica. பார்க்கப்பட்ட நாள் 2014-03-09.
- ↑ 2.0 2.1 J. J. O'Connor; E. F. Robertson. "Georg Peuerbach". பார்க்கப்பட்ட நாள் 2014-03-09.
மேற்கோள்கள்
- Attribution
- இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பில் உள்ள வெளியீடு ஒன்றின் பகுதிகளைக் கொண்டுள்ளது: Fox, William (1913). "George von Peuerbach". Catholic Encyclopedia. நியூயோர்க்: இராபர்ட் ஆப்பில்டன்.
மேலும் படிக்க
- Ralf Kern: Wissenschaftliche Instrumente in ihrer Zeit. Band 1: Vom Astrolab zum mathematischen Besteck. Köln, 2010.
- O'Connor, John J.; Robertson, Edmund F., "ஜியார்ஜ் வான் பியூயர்பக்", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
- Electronic facsimile-editions of the rare book collection at the Vienna Institute of Astronomy
வெளி இணைப்புகள்
- "Peuerbach, Georg von". New International Encyclopedia. (1905).
- கணித மரபியல் திட்டத்தில் ஜியார்ஜ் வான் பியூயர்பக்
- Thony C (May 30, 2011). "The astronomical revolution didn't start here!". The Renaissance Mathematicus. பார்க்கப்பட்ட நாள் 11 June 2011.
- Online Galleries, History of Science Collections, University of Oklahoma Libraries[தொடர்பிழந்த இணைப்பு] High resolution images of works by and/or portraits of Georg von Peurbach in .jpg and .tiff format.