ஜி. எஸ். எல். வி மார்க் III

ஜி. எஸ். எல். வி மார்க் III
ஜி. எஸ். எல். வி மார்க் III டி2 - ஜிசாட்-29 உடன்
ஜி. எஸ். எல். வி மார்க் III டி2 - ஜிசாட்-29 உடன்
தரவுகள்
இயக்கம் Heavy-Lift Launch System
அமைப்பு இஸ்ரோ
நாடு  இந்தியா
அளவு
உயரம் 42.4 m
விட்டம் 4.0 m
நிறை 630,000 கிலோகிராம்
படிகள் 2
கொள்திறன்
Payload to LEO 8,000 கிலோகிராம்[1]
Payload to
GTO
4,000 கிலோகிராம் [1]
ஏவு வரலாறு
நிலை செயலில்
ஏவல் பகுதி சதீஸ் தவான் விண்வெளி மையம்
மொத்த ஏவல்கள் 3
வெற்றிகள் 3
முதல் பயணம் 18 டிசம்பர் 2014 (துணை சுற்றுப்பாதை)

5 ஜூன் 2017 (சுற்றுப்பாதை)

Boosters (Stage 0) - S-200
No boosters 2
Engines 1 திட எரிபொருள்
Thrust 7698 கிலோ நியூட்டன்
குறித்த உந்தம் 269 வினாடிகள்
எரிநேரம் 108 வினாடிகள்
எரிபொருள் திட எரிபொருள்
First Stage - L-110
Engines 2 விகாஸ்
Thrust 1,600 கிலோ நியூட்டன்
குறித்த உந்தம் 300 sec
எரிநேரம் 220-230 வினாடிகள்
எரிபொருள் UDMH + N2O4
Second Stage - C-25
Engines 1 CE-20
Thrust 200 கிலோ நியூட்டன் (20 Tf)
குறித்த உந்தம் 450 வினாடிகள்
எரிநேரம் 720 வினாடிகள்
எரிபொருள் LOX/LH2

புவி ஒத்தியங்கும் செயற்கைக்கோள் ஏவூர்தி மார்க் III (The Geosynchronous Satellite Launch Vehicle Mark III) புவி ஒத்தியங்கும் வட்டணையில் ஏவப்படும் செயற்கைக்கோள் ஏவூர்தி ஆகும். இசுரோ (ISRO)வினால் வடிவமித்துக் கட்டமைக்கப்பட்ட இது ஒரு முறை மட்டுமே ஏவும் மீளப்பயன்பட இயலாத வகை ஏவூர்தி ஆகும்.[2][3] 5 ஜூன் 2017 அன்று 17:28 மணியளவில் இந்தியாவின் சத்தீசு தவான் விண்வெளி மையத்திலிருந்து ஜிசாட்-19 (GSAT-19) செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்பட்டது.[4]இந்த ஏவூர்தியால் புவி ஒத்தியங்கும் வட்டணைக்குச் செயற்கைக் கோள்களைச் செலுத்த இயலும். மேலும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பவும் இயலும். இந்த ஏவூர்தியின் மூன்றாவது அடுக்கில் தண்ணியக்கப் பொறி பயன்படுத்தப்படுகிறது. இதனால் அதிக எடையுடைய விண்கலங்களை ஏவ இயலும்.[5][6]

வரலாறு

புவி ஒத்தியங்கும் செயற்கைக்கோள் ஏவூர்தி மார்க் III மேம்பாட்டுப் பணிகள் 2000 ஆண்டுகளில் தொடங்கப்பட்டு முதல் ஏவுதல் 2009 - 2010 கால இடைவெளியில்நிகழலாம் எனத் திட்டமிடப்பட்டது. பல்வேறு காரணிகளால் திட்டமிட்டபடி ஏவ இயலாமல் போனது.[7] 15 ஏப்ரல் 2010 புவி ஒத்தியங்கும் செயற்கைக்கோள் ஏவூர்தி மார்க் II ஏவூர்தியின் மேலடுக்கு ந்தண்னியக்கப் பொறி]] சரியாக இயங்காமல் தோல்வியடைந்ததும் தாமதத்திற்கான காரணங்களில் ஒன்றாகும்.[7]

தன்ணியக்கப் பொறி மேம்பாடு

1987 ஆம் ஆண்டில் இந்திய அரசு இன்சாட்-2 வகைச் செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவ இசைவு அளித்தது. இவ்வகைச் செயற்கைக்கோள்களின் எடை 2 டன்களுக்கும் அதிகமாக இருந்ததால் புவி ஒத்தியங்கும் வட்டணைக்குச் செயற்கைக் கோள்களைச் செலுத்த தண்னியக்கப் பொற் தேவையானதாக இருந்தது. உருசியாவிடமிருந்து இவ்வகைப் பொறிகளை வாங்க செய்யப்பட்ட ஒப்பந்தம் அமெரிக்காவின் எதிர்ப்பால் தடைசெய்யப்பட்டது.[8] இதன் காரணமாக உருசிய வடிவமைப்பில் உள்நாட்டிலேயே தண்னியக்கப் பொறி வடிவமைத்துக் கட்டமைப்பட்டது.[9]

ஏவூர்தி வகைகள்

புவி ஒத்தியங்கும் செயற்கைக்கோள் ஏவூர்தி மார்க் III ஏவூர்தி வடிவமைப்பைக் கீழ்க்கண்ட ஏவூர்திகளுடன் ஒப்பிடலாம்,

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

அறிவியல் சாதனை: இஸ்ரோவின் பாகுபலி, தி இந்து, 2017 சூன் 13