ஜேம்ஸ் கண்டோல்பினி
ஜேம்ஸ் கண்டோல்பினி அமெரிக்கத் திரைப்பட நடிகர் ஆவார். எச்பிஓ தொலைக்காட்சியில் வெளியான தி சோப்ரனோஸ் என்ற நாடகத் தொடரில் நடித்து பிரபலமானவர். இவர் எம்மி விருது, ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது, கோல்டன் குளோப் விருது ஆகியவற்றை பெற்றுள்ளார். இவர் ஆவணப் படங்களையும் தயாரித்துள்ளார். இவர் முப்பதுக்கும் அதிகமான திரைப்படங்களிலும், ஐந்து தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். இனஃப் செட் என்ற திரைப்படத்திற்காக அபல விருதுகளைப் பெற்றார். தி சொப்ரனோஸ் என்ற நாடகமும் பல விருதுகளைப் பெற்றுத்தந்தது.