ஜேயூனிட்
ஜேயூனிட் (junit) என்பது மீண்டும் மீண்டும் அலகு சோதனைகள் எழுத உதவும் ஒரு எளிய கட்டமைப்பு. இது ஜாவா நிரலாக்க மொழிக்கான அலகு சோதனை கட்டமைப்பாகும். இது எக்க்ஸ்யூனிட் (xUnit) கட்டமைப்பிலிருந்து வெளியான ஜாவா நிரல்மொழிக்கான கட்டமைப்பாகும்.
வரலாறு
ஜேயூனிட் ஜாவா நிரல்களின் சோதனை நிகழ்வுகளில் எழுதி இயக்கும் நோக்கத்திற்காக கென்ட் பெக், எரி காமா மூலம் வடிவமைக்கப்பட்ட ஒரு திறந்த மூல கட்டமைப்பு ஆகும். இந்த கட்டமைப்பு உருவாக்கம் மற்றும் சோதனை செயல்முறை இடையே உறவை உருவாக்குகிறது.
ஜேயூனிட்டின் சோதனை புள்ளி
ஜேயூனிட்டின் சோதனை புள்ளியே ((Test Fixture) ஒரு ஜாவா பொருள் (Java Object) ஆகும். ஒவ்வொரு சோதனை செயல்முறைக்கும் விளக்கம் அல்லது அனொட்டேஷன் (Annotation) கொடுக்க வேண்டும்.
import org.junit.*;
public class TestFoobar{
@BeforeClass
public static void setUpClass() throws Exception {
// Code executed before the first test method // முதல் சோதனை செயல்முறைக்கு முன் செயல்படும் குறியீடு
}
@Before
public void setUp() throws Exception {
// Code executed before each test // ஓவ்வொரு சோதனையின் போதும் செயல்படும் குறியீடு
}
@Test
public void testOneThing() {
// Code that tests one thing // ஒரு சோதனை செயல்முறை
}
@Test
public void testAnotherThing() {
// Code that tests another thing // வேற்றொரு சோதனை செயல்முறை
}
@Test
public void testSomethingElse() {
// Code that tests something else // வேற்றொரு சோதனை செயல்முறை
}
@After
public void tearDown() throws Exception {
// Code executed after each test // ஒவ்வொரு சோதனை முடிவடைந்த பிறகு செயல்படும் செயல்முறை
}
@AfterClass
public static void tearDownClass() throws Exception {
// Code executed after the last test method // கடைசி சோதனை முடிவடைந்த பிறகு செயல்படும் செயல்முறை
}
}