ஞானேந்திரா
ஞானேந்திரா Gyanendra ज्ञानेन्द्र वीर बिक्रम शाहदेव Jñānendra Vīra Vikrama Śāhadeva | |
---|---|
நேபாள மன்னர் | |
ஆட்சி | நவம்பர் 7, 1950 – ஜனவரி 8 1951 ஜூன் 4 2001 – மே 28, 2008 |
முன்னிருந்தவர் | திரிபுவன வீர விக்ரம் ஷா(1951) திபெந்திரா (2001) |
வாரிசு | கிரிஜா பிரசாத் கொய்ராலா (2008; பதில் அரசுத் தலைவர்) |
வாரிசு(கள்) | இளவரசர் பராஸ் இளவரசி பிராணா |
மரபு | ஷா வம்சம் |
தந்தை | மகேந்திரா |
தாய் | இந்திரா |
ஞானேந்திரா வீர விக்கிரம ஷா தேவ் அல்லது கயனேந்திரா (Gyanendra Bir Bikram Shah Dev; நேபாள மொழி: ज्ञानेन्द्र वीर बिक्रम शाहदेव; Jñānendra Vīra Vikrama Śāhadeva; பிறப்பு: ஜூலை 7, 1947) 2001 முதல் 2008 வரை நேபாளத்தின் மன்னராகவும் அந்நாட்டை 240 ஆண்டு காலமாக ஆட்சிசெய்து வந்த ஷா வம்சத்தின் கடைசி மன்னராகவும் இருந்தவர்.[1]
ஜூன் 1, 2001 இல் நேபாள அரச மாளிகையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வுகளில் மன்னர் பிரேந்திராவும் அவரது குடும்பமும் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து பதவிக்கு வந்த பிரேந்திராவின் மகன் இளவரசர் திபெந்திரா மூன்றே நாட்களில் படுகாயமடைந்த நிலையில் இறந்ததை அடுத்து திபெந்திராவின் சித்தப்பாவான ஞானேந்திரா நேபாள மன்னரானார். இப்படுகொலைகளுக்கு சூத்திரதாரியாக மன்னர் ஞானேந்திரா பலராலும் குற்றம் சாட்டப்பட்டாலும் அதிகாரபூர்வமாக மன்னர் தீபேந்திராவே இப்படுகொலைகளை நிகழ்த்தியவர் என அறிவிக்கப்பட்டது.
பெப்ரவரி 2005 இல் ஞானேந்திரா நாட்டின் அரசை தனது முழுக்கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றத்தைக் கலைத்தார். 2006 இல் மக்களின் சனநாயக எழுச்சியைத் தொடர்ந்து ஏப்ரல் 2006 இல் மன்னர் ஞானேந்திரா ஆட்சியை நாடாளுமன்றத்துக்கு அளிக்கும் படியாகிவிட்டது. இதனால் மன்னரின் அதிகாரமும் பல மடங்கு குறைந்தது. மே 28 2008 வரையில் அவர் தொடர்ந்து மன்னராக இருந்து கடைசியில் அமைதியாக மன்னர் பதவியைத் துறந்தார்.[2] நேபாளம் குடியரசாகியது.