டான் பெய்ன்
டான் பெய்ன் | |
---|---|
பிறப்பு | வில்லியம் டொனால்ட் பெய்ன் மே 5, 1964 வில்மிங்டன், வட கரோலினா, ஐக்கிய அமெரிக்கா |
இறப்பு | மார்ச்சு 26, 2013 லாஸ் ஏஞ்சலஸ், ஐக்கிய அமெரிக்கா | (அகவை 48)
பணி | திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் |
வில்லியம் டொனால்ட் பெய்ன் (William Donald Payne, மே 5, 1964 - மார்ச்சு 26, 2013) என்பவர் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் ஃபெண்டாஸ்டிக் ஃபோர் 2 (2007), தோர் (2011) மற்றும் தோர்: த டார்க் வேர்ல்டு (2013) போன்ற திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் எலும்பு புற்றுநோயால் மார்ச் 2013 இல் காலமானார்.
ஆரம்ப கால வாழ்க்கை
இவர் மே 5, 1964 அன்று அமெரிக்காவின் வட கரோலினாவின் வில்மிங்டனில் பிறந்தார்.[1][2][3] அவர் நியூ ஹனோவர் உயர்நிலைப் பள்ளியில் பயின்று 1982 இல் பட்டம் பெற்றார். அவர் கல்லூரியில் வகுப்பு தலைவராகவும் இருந்துள்ளார்.
மேற்கோள்கள்
- ↑ King, Susan (March 27, 2013). "Don Payne dies at 48; 'Simpsons' writer and producer". Los Angeles Times. http://www.latimes.com/news/obituaries/la-me-don-payne-20130328,0,5523448.story.
- ↑ Slotnik, Daniel (2013-03-29). "Don Payne, 'Simpsons' Scriptwriter, Dies at 48". The New York Times. https://www.nytimes.com/2013/03/29/arts/television/don-payne-simpsons-scriptwriter-dies-at-48.html.
- ↑ University of North Carolina Wilmington (August 15, 2005). "Hometown Honors Don Payne, Award Winning Writer of The Simpsons". Archived from the original on April 17, 2017. பார்க்கப்பட்ட நாள் 2013-03-27.