டி 4 செயல்
டி 4 செயல்- (T4 Action- Euthanasia Program) வலியில்லா மரணம் விளைவித்தல் , நாசி ஜெர்மனியில் இந்த செயல் மூலம் 1939 முதல் 1941 வரையிலுள்ள நாசி ஜெர்மனி காலத்தில் ஜெர்மனி மருத்துவர்களால் சுமார் 70,273 மக்கள் கொல்லப்பட்டனர். ஊனமானவர்கள், மன நோயால் பாதிக்கப்பட்ட யேர்மனியர்கள் இவ்வாறு கொல்லப்பட்டார்கள். இவர்களை உயர்ந்த யேர்மனிய மனித இனத்துக்குப் பொருத்தல் இல்லாதவர்கள் என்பதால் கொல்லப்பட வேண்டும் என்று நாசிகள் முடிவு செய்தனர். செப்டம்பர் 1, 1939 ல் வெளியிடப்பட்ட இட்லரின் ரகசிய சுற்றறிக்கையின்படி மிகவும் கொடிய தீர்க்க முடியாத நோயினால் பாதிக்கபட்டவர்கள் என்றும் மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்கள் என்றும் காரணம் காட்டி நச்சு வாயு செலுத்திக் கொல்லப்பட்டனர். அக்டோபர் 1941 ல் சுமார் 2,75000 மக்கள் டி 4 செயல் மூலம் கொல்லப்பட்டதாக தக்க சாட்சியங்களுடன் நியுரம்பெர்க் விசாரணை ஆணையம் உறுதி செய்தது. சங்கேத வார்த்தையான டி 4 என்பது டையர் கார்ட்டன்ஸ்டார்ப் 4 (பெர்லினுடைய ஒரு வீதியின் பெயர்) என்ற வார்த்தையின் சுருக்கமே. இந்த இடத்தில் இயங்கிவரும் மருத்துவக்குழுவுக்கே அந்த ரகசிய சுற்றறிக்கை சென்றது.
இவற்றையும் பார்க்க
- இனமேம்பாட்டியியல்