டிப்ளோடோக்கசு
டிப்ளோடோக்கசு புதைப்படிவ காலம்:பிந்திய யுராசிக், | |
---|---|
கார்னெகீ இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள 'டி. கார்னெகீ யின் எலும்புக்கூடு. | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | டிப்ளோடோக்கசு |
மாதிரி இனம் | |
†டிப்ளோடோக்கசு லோங்கசு nomen dubium மாசு, 1878 | |
பிற இனங்கள் | |
| |
வேறு பெயர்கள் | |
செயிஸ்மோசோரசு கில்லெட், 1991 |
டிப்ளோடோக்கசு (Diplodocus) என்பது, டிப்பியோடோசிட் சோரோபாட் டைனோசோரின் அழிந்துபோன பேரினம் ஆகும். இதன் புதைபடிவங்கள் 1877 ஆம் ஆண்டில் எசு. டபிள்யூ. வில்லிஸ்டன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. 1878 இல் ஒத்னியேல் சார்லசு மாசு (Othniel Charles Marsh) என்பவரால் உருவாக்கப்பட்ட இதன் பொதுப் பெயர் ஒரு புது-இலத்தீன் சொல். இது கிரேக்கச் சொற்களான "டிப்ளோஸ்" (இரட்டை), "டோக்கோஸ்" (வளை) என்பவற்றிலிருந்து பெறப்பட்டது.[1][2] இதன் வாலுக்குக் கீழேயுள்ள, இரட்டை வளை போன்ற கவரெலும்பு காரணமாக இப்பெயர் ஏற்பட்டது. இவ்வகையான கவரெலும்புகள் டிப்ளோடோக்கடுக்கு மட்டுமே தனித்துவமானது என முதலில் நம்பப்பட்டது. பின்னர் டிப்ளோடோசிட்டின் பிற உறுப்பினங்களுக்கும், மமென்சுசோரசு போன்ற டிப்ளோசிட் சோரோபாட் அல்லாதவற்றிலும் இது இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
டைனோசோரின் இப்பேரினம், இப்போது நடு-மேற்கு வட அமெரிக்கா என அழைக்கப்படும் பகுதியில் யுராசிக் காலத்தில் வாழ்ந்தது. டிப்ளோடோக்கசுவின் புதைபடிவங்கள், நடு முதல் மேல் "மொரிசன் உருவாக்கம்" வரையில் மிகப் பொதுவாகக் கிடைக்கும் டைனோசோர் புதைவடிவங்களுள் அடங்குகின்றன. இவை பிந்திய கிமெரிஜியன் காலத்துள் அடங்கும் 154 க்கும் 152 க்கும் இடைப்பட்ட மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தியவை. "மொரிசன் உருவாக்கம்", அப்பட்டோசோரசு, பரோசோரசு, பிராச்சியோசோரசு, புரொன்டோசோரசு, காமராசோரசு போன்ற மிகப்பெரிய சோரோபாட் டைனோசோர்கள் ஆதிக்கம் செலுத்திய சூழல் ஆகும்.[3]
சோரோபாட் வடிவம், நீளமான கழுத்தும் வாலும், நான்கு உறுதியான கால்கள் என்பவற்றோடு கூடிய டிப்ளோடோக்கசு மிக இலகுவாக அடையாளம் காணத்தக்க டைனோசோர் ஆகும். பல ஆண்டுகளாக இதுவே அறியப்பட்ட டைனோசோர்களில் மிக நீளமானது. அல்லோசோரசு, செராட்டோசோரசு போன்ற கொன்றுண்ணிகளுக்கு, டொப்ளோடோக்கசின் அளவு அச்சுறுத்தலாக இருந்திருக்கக்கூடும். இவ்விரு கொன்றுண்ணிகளினது எச்சங்களும் அதே படைகளில் காணப்படுவது அவை இரண்டும் டிப்ளோடோக்கசுடன் ஒரே காலத்தில் வாழ்ந்ததைக் காட்டுகிறது.
விவரம்
மிகவும் அறியப்பட்ட சோரோபாடுகளில் டிப்ளோடோக்கசு மிகப் பெரியதும், நீண்ட கழுத்தைக் கொண்டதுமான நான்குகால் விலங்கு. இதன் வால் நீளமான சவுக்குப் போன்றது. இதன் முன்னங்கால்கள், பின்னங்கால்களைவிடச் சற்றுக் குட்டையானவை. இதனால் அதன் உடல் கிடையான அமைப்பில் காணப்படுகின்றது. நீண்ட கழுத்தையும், வாலையும் கொண்டு நான்கு உறுதியான கால்களில் தாங்கப்பட்ட இவ்விலங்கின் எலும்புக்கூட்டு அமைப்பு தொங்கு பாலத்தை ஒத்துக் காணப்படுகிறது.[4] 25 மீட்டர் நீளம்[5] கொண்ட முழுமையான எலும்புக் கூட்டில் இருந்து, டிப்ளோடோக்கசு கார்னெகீ (Diplodocus carnegii) இப்போது மிக நீளமான டைனோசோராக அறியப்பட்டுள்ளது.[4] தற்கால மதிப்பீடுகளின்படி டிப்ளோடோக்கசு கார்னெகீயின் எடை 10 முதல் 16 மெட்ரிக் தொன்கள் வரை இருக்கக்கூடும் எனத் தெரிகிறது.[5][6][7][8][9]
பகுதி எச்சங்களில் இருந்து அறியப்படும் டிப்ளோடோக்கசு அல்லோரம் முன்னதைவிடப் பெரியது. அது நான்கு யானைகளின் அளவு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.[10] 1991 இல் இதை முதன் முதலாக விபரித்த டேவிட் கில்லெட் (David Gillette) அதன் நீளம் 52 மீட்டர் (171 அடி) வரை இருக்கலாம் என மதிப்பிட்டார்.[11] இதன் அடிப்படையில் அறியப்பட்ட டைனோசோர்களில் இதுவே மிகப்பெரியதாக இருந்தது (போதுமானதாக இல்லாத எச்சங்களைக் கொண்டு மதிப்பிடப்பட்ட அம்பிகோவெலியாசு போன்றவை தவிர). அக்காலத்தில் இதன் எடை 113 தொன்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. இதன் நீளம் 33.5 மீட்டர் (110 அடி) எனப் பின்னர் திருத்தி மதிப்பிடப்பட்டது. பின்னர், முள்ளந்தண்டு எலும்புகள் 12-19 ஐ 20-27 ஆகப் பிழையாக வைத்து மதிப்பிட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் அதன் நீள மதிப்பீடு 32 மீட்டர் (105 அடி) ஆனது.[12][13] பென்சில்வேனியாவின் பிட்சுபர்க்கில் அமைந்துள்ள கார்னெகீ இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள, ஏறத்தாழ முழுமையான எலும்புக்கூட்டை அடிப்படையாக வைத்தே டி. அல்லோரம் டைனோசோரின் அளவு மதிப்பிடப்பட்டிருந்தது. இதன் 13 ஆவது வால் எலும்பு வேறு டைனோசோரின் பகுதி எனப் பின்னர் கண்டறியப்பட்டதால் அதன் நீள மதிப்பீடு மேலும் குறைந்தது. எலும்புக் கூட்டின் புதைபடிவத் துண்டுகள் மட்டுமே கிடைத்துள்ள சுப்பர்சோரசு போன்ற டைனோசோர்கள் பெரியனவாக இருக்கக்கூடும்.[14]
மேற்கோள்கள்
- ↑ Simpson, John; Edmund Weiner, eds. (1989). The Oxford English Dictionary (2nd ed.). Oxford: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-861186-2.
- ↑ "diplodocus". Online Etymology Dictionary.
- ↑ Turner, C.E.; Peterson, F. (2004). "Reconstruction of the Upper Jurassic Morrison Formation extinct ecosystem—a synthesis". Sedimentary Geology 167 (3–4): 309–355. doi:10.1016/j.sedgeo.2004.01.009. Bibcode: 2004SedG..167..309T.
- ↑ 4.0 4.1 Lambert D. (1993). The Ultimate Dinosaur Book. DK Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-86438-417-3.
- ↑ 5.0 5.1 Paul, Gregory S. (2010). Princeton Field Guide to Dinosaurs. Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-13720-9.
- ↑ Foster, J.R. (2003). Paleoecological Analysis of the Vertebrate Fauna of the Morrison Formation (Upper Jurassic), Rocky Mountain Region, U.S.A. New Mexico Museum of Natural History and Science:Albuquerque, New Mexico. Bulletin 23.
- ↑ Dodson, P.; Behrensmeyer, A.K.; Bakker, R.T.; McIntosh, J.S. (1980). "Taphonomy and paleoecology of the dinosaur beds of the Jurassic Morrison Formation". Paleobiology 6: 208–232. https://archive.org/details/sim_paleobiology_spring-1980_6_2/page/208.
- ↑ Coe, M.J.; Dilcher, D.L.; Farlow, J.O.; Jarzen, D.M.; Russell, D.A. (1987). "Dinosaurs and land plants". In Friis, E.M.; Chaloner, W.G.; Crane, P.R. (eds.). The Origins of Angiosperms and Their Biological Consequences. Cambridge University Press. pp. 225–258. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-32357-6.
- ↑ Benson, R. B. J.; Campione, N. S. E.; Carrano, M. T.; Mannion, P. D.; Sullivan, C.; Upchurch, P.; Evans, D. C. (2014). "Rates of Dinosaur Body Mass Evolution Indicate 170 Million Years of Sustained Ecological Innovation on the Avian Stem Lineage". PLoS Biology 12 (5): e1001853. doi:10.1371/journal.pbio.1001853. பப்மெட்:24802911.
- ↑ Holtz, Thomas R., Jr.; Rey, Luis V. (2011). Dinosaurs: the most complete, up-to-date encyclopedia for dinosaur lovers of all ages (Winter 2011 appendix) (PDF). New York: Random House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-375-82419-7.
{cite book}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Gillette, D.D., 1994, Seismosaurus: The Earth Shaker. New York, Columbia University Press, 205 pp
- ↑ Carpenter, K. (2006). "Biggest of the big: a critical re-evaluation of the mega-sauropod Amphicoelias fragillimus." In Foster, J.R. and Lucas, S.G., eds., 2006, Paleontology and Geology of the Upper Jurassic Morrison Formation. New Mexico Museum of Natural History and Science Bulletin 36: 131–138.
- ↑ "The biggest of the big". Skeletaldrawing.com. 2013-06-14. பார்க்கப்பட்ட நாள் 2016-05-26.
- ↑ Wedel, M.J. and Cifelli, R.L. Sauroposeidon: Oklahoma's Native Giant. 2005. Oklahoma Geology Notes 65:2.