டிரையெத்தில் போரேட்டு
![]() | |
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டிரையெத்தில் போரேட்டு
| |
வேறு பெயர்கள்
போரான் டிரையீத்தாக்சைடு
போரிக் அமிலம், டிரையெத்தில் எசுத்தர் | |
இனங்காட்டிகள் | |
150-46-9 ![]() | |
ChEBI | CHEBI:38916 ![]() |
ChemSpider | 8659 ![]() |
EC number | 205-760-9 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 9009 |
| |
பண்புகள் | |
C6H15BO3 | |
வாய்ப்பாட்டு எடை | 145.99 g·mol−1 |
தோற்றம் | தெளிவான நீர்மம் |
அடர்த்தி | 0.858 கி/செ.மீm3 |
உருகுநிலை | −85 °C (−121 °F; 188 K) |
கொதிநிலை | 118 °C (244 °F; 391 K) |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 11 °C (52 °F; 284 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
டிரையெத்தில் போரேட்டு (Triethyl borate) என்பது B(C2H5O)3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். போரான் டிரையீத்தாக்சைடு அல்லது போரிக் அமிலம் அல்லது மூவெத்தில் போரேட்டு என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. நிறமற்ற இச்சேர்மம் எளிதில் தீப்பற்றக் கூடியதாகும். போரிக் அமிலம் மற்றும் எத்தனாலின் எசுத்தர் என்று டிரையெத்தில் போரேட்டு வகைப்படுத்தப்படுகிறது. −85 ° செல்சியசு வெப்பநிலையில் உருகும் இச்சேர்மம் 118 ° செல்சியசு வெப்பநிலையில் கொதிக்கிறது. 11° செல்சியசு வெப்பநிலையில் தீப்பற்றி எரிகிறது. மேலும் இதுவொரு பலவீனமான லூயிசு அமிலமாகும். கட்மான்– பெக்கட் முறையில் லூயிசு அமிலத்தன்மை ஏற்பு எண் 17 என கணக்கிடப்பட்டுள்ளது [1].. டிரையெத்தில் போரேட்டு பச்சை நிற சுவாலையுடன் தீப்பற்றி எரிகிறது. எத்தனாலில் உள்ள இதன் கரைசல்கள் வானவேடிக்கை தொழிலில் சிறப்பு விளைவுகளை உண்டாக்க பயன்படுத்தப்படுகிறது.
ஓர் அமில வினையூக்கியின் முன்னிலையில் போரிக் அமிலமும் எத்தனாலும் வினைபுரிவதால் டிரையெத்தில் போரேட்டு உருவாகிறது. கீழ்கண்ட வேதிச்சமநிலை வினையின் வழியாக இச்சேர்மத்தின் உருவாக்கம் நிகழ்கிறது,
- B(OH)3 + 3 C2H5OH
(C2H5O)3B + 3 H2O
முன்னோக்கிச் செல்லும் வினை விகிதத்தை அதிகரிக்கும் பொருட்டு, வினையில் உருவாக்கப்பட்ட நீர் வினை ஊடகத்திலிருந்து நீக்கப்படுகிறது. கொதிநிலை மாறா வடிகட்டல் முறை அல்லது பரப்புக்கவர்ச்சி ஈர்ப்பு முறை இதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. செயற்கை மெழுகு, பிசின், வண்ணங்கள், பளபளப்பான மேற்பூச்சுகள் தயாரிப்பில் கரைப்பானாக அல்லது வினையூக்கியாக இது பயன்படுத்தப்படுகிறது. சில தீத்தடுப்புப் பொருட்கள் மற்றும் பற்றவைக்கும் இளகிகளில் இது ஒரு பகுதிப்பொருளாக உள்ளது.
மேற்கோள்கள்
- ↑ M.A. Beckett, G.C. Strickland, J.R. Holland, and K.S. Varma, "A convenient NMR method for the measurement of Lewis acidity at boron centres: correlation of reaction rates of Lewis acid initiated epoxide polymerizations with Lewis acidity", Polymer, 1996, 37, 4629–4631. doi: 10.1016/0032-3861(96)00323-0