டென்னசி கணவாய் ஆணையம்

டென்னசி கணவாய் ஆணையம்
Tennessee Valley Authority
வகைஅரசு உரிமை நிறுவனம்
நிறுவுகைசெப்டம்பர் 18, 1933 (1933-69-18)
தலைமையகம்நாக்சுவில்லி, டென்னசி, ஐக்கிய அமெரிக்கா
முதன்மை நபர்கள்வில்லியம் கிபிரைடு, தலைவர்[1]
ஜெப் இலியாசு, முசெஅCEO[2]
தொழில்துறைமின்சாரப் பயன்பாட்டுக் குழுமம்
வருமானம் US$12.54 பில்லியன் (2022)
நிகர வருமானம் US$1.11 பில்லியன் (2022)
உரிமையாளர்கள்ஐக்கிய அமெரிக்க கூட்டு அரசு
இணையத்தளம்www.tva.com


டென்னசி பள்ளத்தாக்கு ஆணையம் -இலச்சினை
ஜார்ஜ் டபிள்யூ. நோரிசு

டென்னசி கணவாய் ஆணையம் (Tennessee Valley Authority) TVA என்பது ஐக்கிய அமெரிக்க அரசு உரிமை மின்பயன்பாட்டுக் குழுமக் கூட்டு நிறுவனமாகும். இதன் செயல் பரப்பு முழு டென்னசிக் கணவாய்யலபாமா, மிசிசிப்பி, கெந்துக்கி மாகாணங்களின் பகுதிகள், ஜார்ஜியா, வ்ட கரோலினா, வர்ஜீனியா ஆகியவற்றின் சிறுபகுதிகளும் உள்ளடக்கியதாகும். க்கூட்டு அரசு உரிமையுடையதுவாயினும் இது பொதுவரி சார்ந்தில்லாமல் தனியார் அமைப்பு போல தனித்தே இயங்குகிறது. இதன் தலைமையகம் டென்னசியில் உள்ள நாக்சுவில்லியில் அமைந்துள்ளது. இது ஆறாவது பெரிய மின்வழஙல் நிறுவனமாகும். நாட்டிலேயே மிகப் பெரிய அரசு பொதுப்பயன்பாட்டு அமைப்பாகும்.[3][4]

இது [5]நியூ டீல்[6] கொள்கை வழி 1933 இல் ஏற்படுத்தப்பட்ட சிறந்த திட்டங்களுள் ஒன்று டென்னசி கணவாய்த் திட்டம் ஆகும். இது பள்ளத்தாக்கில் திட்டமிடும் ஒரு நல்லதொரு முன்முனைவாக அமைந்தது. இயற்கை வளத்தைக் கொண்டு தொழிற்பெருக்கத்தை ஏற்படுத்துவது, வேளாண் வளத்தை ஊக்குவிப்பது என்ற இருநோக்கங்களோடு டென்னசி கணவாய் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதனை நெப்பிராசுக்கானைச் சார்ந்த நோரிசு[7] என்பவர் கொண்டுவந்தார்.

இத்திட்டத்தின் முக்கிய கூறுபாடுகளாவன:

  1. இது மிகப்பெரிய பரப்பளவைக் கொண்ட டென்னசி பள்ளத்தாக்குப் பகுதியில் ஒரு அணை அமைய உதவியது.
  2. மின் ஆக்கம் அதிகரிக்கப்பட்டது.
  3. இத்திட்டத்தின் மூலம் மண் அரிப்பு தடுக்கப்பட்டது.
  4. வெள்ளச் சேதம் குறைக்கப்பட்டது.
  5. தொழிற்சாலைகளின் விளைபொருட்கள் ஆக்கம் பெருகியது.
  6. நீர்ப்பாசனம் பெருக்கப்பட்டது.
  7. வேளாண்மை விரிவடைந்தது.

டென்னசி நதிப்பள்ளத்தாக்குத் திட்டம் கிட்டத்தட்ட நாற்பதினாயிரம் சதுர மைல்கள் பரவியிருந்தது. மிகப்பெரிய அளவில் அனைவரும் பயன்பெறும் ஒரு பெரிய அரசுத் தொழில் நிறுவனமாக அது விளங்கியது. இவற்றால் கி.பி.1929 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளியல் மந்தநிலை திறமையுடன் சமாளிக்கப்பட்டது.

குறிப்புகள்

மேற்கோள்கள்

நூல்தொகை

வெளி இணைப்புகள்