டெரிக் ஓ பிரியன்

டெரிக் ஓ பிரியன்

டெரிக் ஓ பிரியன் (Derek O' Brien 13 மார்ச்சு 1961) என்பவர் இந்திய மாநிலங்களவை உறுப்பினர், திரிணாமூல் காங்கிரசைச் சேர்ந்தவர். தொலைக்காட்சியில் போர்ன் விடா வினா விடைப் போட்டி நடத்துபவர்.

டெரிக் ஓ பிரியன் கல்கத்தாவில் பிறந்த ஆங்கிலோ இந்தியர் ஆவார். தொலைக் காட்சியில் மட்டுமல்லாமல் பள்ளிகளுக்கு இடையேயும் வினா விடைப் போட்டிகள் நடத்தினார். 2004 ஆம் ஆண்டில் திரிணாமுல் காங்கிரசுக் கட்சியில் சேர்ந்தார்.[1]

இவருடைய தந்தை நெயில் ஓ பிரியன் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் மூன்று முறை மேற்கு வங்க சட்ட மன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.[2]

மேற்கோள்