டோர்னோட் மாகாணம்
டோர்னோட் (மொங்கோலியம்: Дорнод, பொருள்: கிழக்கு) என்பது மங்கோலியாவின் 21 ஐமக்குகளில் (மாகாணங்கள்) கிழக்கில் கடைசியாக உள்ளதாகும்.[1] இதன் தலைநகரம் சோயிபல்சன்.
மக்கள் தொகை
இந்த ஐமக்கில் பெரும்பான்மையாக உள்ள மக்கள் ஹல் இனத்தவர் ஆவர். எனினும் புர்யத் இனக்குழு மக்களும் 22.8% அளவிற்கு வசிக்கின்றனர். 2000வது ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அவர்களின் எண்ணிக்கை 17,196 ஆகும்.
வரலாறு
இந்த ஐமக் 1941ம் ஆண்டின் நிர்வாக சீரமைப்பின் போது உருவாக்கப்பட்டது. அந்நேரத்தில் இதன் பெயர் சோயிபல்சன் என்று அழைக்கப்பட்டது. பொதுவுடமை தலைவர் கோர்லூகீன் சோயிபல்சனுக்குப் பிறகு அவ்வாறு பெயரிடப்பட்டது. இதன் தலைநகரம் பயன் தியூமன் என்று அழைக்கப்பட்டது. பின்னர் அதுவும் சோயிபல்சன் என்று பெயரிடப்பட்டது. 1963ஆம் ஆண்டு இந்த ஐமக்கிற்கு அதன் தற்போதைய பெயரான டோர்னோட் கொடுக்கப்பட்டது.
குறிப்பிடத்தக்க நபர்கள்
- சிமேடீன் சைகான்பிலேக், மங்கோலியாவின் பிரதம மந்திரி
உசாத்துணை
- ↑ "Дорнод аймагт оршин суудаг ястнууд". Archived from the original on 2011-07-22. பார்க்கப்பட்ட நாள் 2009-05-06.