தங்க ராஸ்பெரி விருது
தங்க ராஸ்பெரி விருது | |
---|---|
தற்போதைய: 39 ஆவது தங்க ராஸ்பெரி விருதுகள் | |
விளக்கம் | மோசமான திரைப்படம் மற்றும் நடிப்புக்கு வழங்கப்படும் விருதுகள் |
நாடு | அமெரிக்கா |
வழங்குபவர் | தங்க ராஸ்பெரி விருது நிறுவனம் |
முதலில் வழங்கப்பட்டது | மார்ச் 31, 1981 |
இணையதளம் | razzies.com |
தங்க ராஸ்பெர்ரி விருதுகள் ( ராஸ்ஸீஸ் மற்றும் ராஸ்ஸி விருதுகள் போன்ற பெயர்களாலும்) ஒரு நையாண்டி விருது ஆகும். இவ்விருது திரைத்துறையில் பணியாற்றியிருந்த ஜான் ஜே. பி. வில்சன் மற்றும் மோ மர்பி ஆகியோரால் லாஸ் ஏஞ்சல்ஸில் வருடா வருடம் வழங்கப்படுகிறது. ராஸ்ஸி விருதுகள் வழங்கும் விழா அகாடமி விருதுகள் விழாவிற்கு ஒரு நாள் முன்னதாக நடைபெரும். இவ்விருது திரைத் துறையில் மோசமான செயல்திறனை வெளிபடுத்தியவர்களுக்கு வழங்கப்படும்.
முதல் தங்க ராஸ்பெரி விருதுகள் விழா லாஸ் ஏஞ்சல்ஸில் ஜான் ஜே. பி. வில்சனின் வீட்டில், மார்ச் 31, 1981 அன்று நடைபெற்றது. அங்கு முதல் மோசமான படத்திற்கான விருது கான்ட் ஸ்டாப் தி ம்யூசிக் படத்திற்கு வழங்கப்பட்டது.
வடிவம்
தங்க ராஸ்பெரி விருதுக்கான விருது வென்றவர்களை தீர்மானிக்க தங்க ராஸ்பெர்ரி விருது அறக்கட்டளைக்கு பணமளிக்கும் சந்தாதாரர்கள் சிலவற்றை பரிந்துரை செய்து வாக்களிப்பர்.[1] 2009 ஆம் ஆண்டில் 29 வது தங்க ராஸ்பெர்ரி விருதுகள், சுமார் 650 ஊடகவியலாளர்கள், சினிமா ரசிகர்கள் மற்றும் திரைப்படத் தொழிலாளர்களின் வாக்குகளை அடிப்படையாகக் கொண்டிருந்தன.[1][2][3]
விருது வென்றவர்கள்
பெரும்பாலான ராஸ்பெர்ரி விருது வென்றவர்கள் தங்கள் விருதுகளை பெற விழாவில் கலந்து கொள்ளமாட்டார்கள்.[4] டாம் கிரீன் (மோசமான நடிகர் / மோசமான இயக்குநர்), ஹாலே பெர்ரி [4][5] மற்றும் சாண்ட்ரா புல்லக் (மோசமான நடிகை), மைக்கேல் பெர்ரிஸ், ஜே.டி. ஷாபிரோ (மோசமான திரைக்கதை) மற்றும் பால் வெர்ஹோவன் (மோசமான இயக்குநர்) ஆகியயோர் குறிப்பிடத்தக்க விதிவிலக்குகளாவர்.
விருது பிரிவுகள்
தற்போதைய விருதுகள்
- மோசமான படம் : 1980 முதல் தற்போது வரை
- மோசமான இயக்குநர் : 1980 முதல் தற்போது வரை
- மோசமான நடிகர் : 1980 முதல் தற்போது வரை
- மோசமான நடிகை : 1980 முதல் தற்போது வரை
- மோசமான துணை நடிகர் : 1980 முதல் தற்போது வரை
- மோசமான துணை நடிகை : 1980 முதல் தற்போது வரை
- மோசமான திரைக்கதை : 1980 முதல் தற்போது வரை
- மோசமான திரை காம்போ : 2013 முதல் தற்போது வரை
- ராஸ்ஸி ரீடிமர் விருது : 2014 to present
மேலும் காண்க
- அகாடமி விருதுகள்
- ஸ்டிங்கர்ஸ் மோசமான திரைப்படத்திற்கான விருதுகள்
- கோல்டன் துருக்கி விருதுகள்
- மோசமானதாக கருதப்படும் திரைப்படங்களின் பட்டியல்
- கோல்டன் ராஸ்பெர்ரி விருதுகளை ஏற்றுள்ள மக்களின் பட்டியல்
குறிப்புகள்
- ↑ 1.0 1.1 Marrs, John (February 25, 2009). "'They have no excuse to be as bad as they are' – The Golden Raspberry awards aren't just a refreshing antidote to the Oscars, they can help sell films too. John Marrs talks to the Razzies' founder, John Wilson". The Guardian. https://www.theguardian.com/film/2009/feb/24/razzies-interview-oscars. பார்த்த நாள்: 2009-05-06.
- ↑ Margulies, Lee (February 21, 2009). "Film Industry Razzes 'Love Guru,' Paris Hilton". Los Angeles Times.
- ↑ Telegraph Herald staff (February 22, 2009). "Hilton, Myers top Razzies". Telegraph Herald.
- ↑ 4.0 4.1 .
- ↑ Razzie Channel (2011-01-13), Halle Berry accepts her RAZZIE® Award, பார்க்கப்பட்ட நாள் 2016-05-23