தடும்ப நாரை
சிறிய பூநாரை | |
---|---|
At Ngorongoro Crater, Tanzania | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | போனிகாப்டெரிடே
|
பேரினம்: | போனிகோனையாசு கிரே, 1869
|
இனம்: | போ. மைனர்
|
இருசொற் பெயரீடு | |
போனிகோனையாசு மைனர் ஜெப்ரி செயிண்ட்-கில்லேர், 1798 | |
சிறிய பூநாரை அல்லது தடும்ப நாரை (Lesser Flamingo; போனிகோனையாசு மைனர்) என்பது ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியில் அதிகமாக காணப்பட்டாலும் நாரையாகும். இவை இந்தியாவின் வடமேற்கு இந்தியாவில் காணப்படுகிறது. இப்பறவை பூநாரை இனத்தைச் சார்ந்தது ஆகும். மேலும் இப்பறவை உலகில் பல பகுதிகளிலும் காணப்படுகிறது. நாடோடி திரிதலில் இப்பறவை தனித்துவமாக சுற்றிவரும் தன்மை கொண்டதாக உள்ளது. 2014 ஆம் ஆண்டு வரை பூநாரை வகையானது என்று கருதப்பட்ட இப்பறவை தற்சமயம் சிறிய பூநாரை வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[2]
பண்புகள்
பறவைகள் வகைகளில் இவை தோற்றத்தில் பெரியதாகத்தோன்றினாலும் இவை சிறிய நாரை வகைகளில் சேர்க்கப்பட்டுள்ளது. இப்பறவையின் எடை 1.2 கிலோ முதல் 2.7 கிலோ வரை உள்ளது. இதன் நீளம் தோகை விரிந்த நிலையில் 90 முதல் 105 செமீ கொண்டதாக உள்ளது.[3][4][5] பொதுவாக இவ்வகை நாரைகள் இளஞ்சிவப்பும் வெள்ளையும் கலந்த நிறத்தில் காணப்படுகிறது. பெரும் பூநாரையிடமிருந்து இதனை பிரிப்பது இதன் அலகுப்பகுதில் காணப்படும் அதிகப்படியான கருப்பு நிறம் ஆகும். மேலும் இவைகளின் உயரம் சற்று குறைவாக உள்ளது. சிறிய நாரைகள் பெரிய வகையான கொக்குகள், இந்தியப் பாலைவனப் பூனை, குரங்குகள் போன்றவற்றால் மோசமாக அழிவுக்குள்ளாகிறது.
படக்காட்சி
-
இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில்
-
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில்
-
பிரிட்டன் வீரரின் வரைகலை
-
கென்யாவில் உள்ள ஒரு ஏரியில்
-
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் எடுக்கப்பட்ட ஒளி-ஒலிப்படம்
-
தென்ஆப்பிரிக்காவில் காம்பெர் அணையில், இனப்பெருக்க காலத்தில்
-
ஈரானில் எடுக்கப்பட்ட படம்
மேற்கோள்கள்
- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Phoeniconaias minor". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
{cite web}
: Invalid|ref=harv
(help) - ↑ [1]|Torres, Chris R; Lisa M Ogawa1; Mark AF Gillingha; Brittney Ferrari1; and Marcel van Tuinen (2014). A multi-locus inference of the evolutionary diversification of extant flamingos (Phoenicopteridae). BMC Evolutionary Biology 14:36.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-10-23. பார்க்கப்பட்ட நாள் 2016-04-18.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-07-10. பார்க்கப்பட்ட நாள் 2016-04-18.
- ↑ [2]
வெளி இணைப்புகள்
- Flamingo Resource Centre பரணிடப்பட்டது 2009-04-13 at the வந்தவழி இயந்திரம் – a collection of resources and information related to flamingos
- ARKive – Images and movies of the lesser flamingo (Phoenicopterus minor) பரணிடப்பட்டது 2004-12-30 at the வந்தவழி இயந்திரம்
- Lesser Flamingo – Species text in The Atlas of Southern African Birds.
- Save the Flamingo – A site dedicated to the conservation of the South African breeding colony