தனித்த சிப்பாய்
a | b | c | d | e | f | g | h | ||
8 | 8 | ||||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
சதுரங்க ஆட்டத்தில், தனக்குப் பக்கவாட்டில் உள்ள வரிசைகளில் நட்பு சிப்பாய் (அதாவது அதே நிறத்தில் உள்ள சிப்பாய்) ஒருவரும் துணைக்கு இல்லாமல் தனிமைப்பட்டு நிற்கும் சிப்பாயை தனித்த சிப்பாய் அல்லது விலகிய சிப்பாய் (Isolated pawn) என்பர். அரசியின் சிப்பாய் இவ்வாறு தனித்து விடப்பட்டால் அதைத் தனித்தீவு சிப்பாய் என்கின்றனர். விலகிய சிப்பாய்கள் பொதுவாகவே பலவீனமானவையே ஆகும். ஏனென்றால் அவை ஆபத்தில் இருக்கும்போது வேறு சிப்பாய்கள் எவரும் துணைக்கு வரமுடியாது. பல பாடநூல் திறப்பாட்டங்கள் குறைந்தது ஒரு விலகிய சிப்பாயையாவது உருவாக்கிவிடுகின்றன. இருந்தபோதிலும் அவற்றை மரபென்று ஏற்றுக் கொண்டனர். ஏனெனில் விலகிய சிப்பாய்கள் நன்மைகளைத் தரும் என்றும், மேம்பட்ட முன்னேற்றத்திற்கு அவை வழிகோலுமென்றும் எடுத்துரைத்தனர். மேலும், எதிரியை வீரத்துடன் எதிர்த்து போரிட கூடுதலான வாய்ப்புகளை உருவாக்கித் தருகின்ற அச்சிப்பாய்கள் விலகியிருப்பது, அப்படியொன்றும் பெரிய பலவீனமல்ல என்றும் நம்பப்பட்டது.
பலவீனங்கள்
ஒரு ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில், விலகிய சிப்பாய்கள் பலவீனத்துடன் நிற்பதாகவே கருதப்படுகிறது. ஏனெனில் அவ்வாறு விலகிய சிப்பாய்க்கு இணைந்த கரங்களுடன் உதவிக்கரம் நீட்ட சிப்பாய் நண்பர்கள் எவரும் வரமுடியாது. படத்தில் உள்ள சிப்பாய்களில் வெள்ளை ஆட்டக்காரரின் e4 கட்டத்தில் உள்ள சிப்பாயும் கருப்பு ஆட்டக்காரரின் a7 கட்டத்தில் உள்ள சிப்பாயும் விலகிய சிப்பாய்கள் ஆவர்.
முக்கியமான இரண்டு காரணங்களுக்காக விலகிய சிப்பாய்கள் பலவீனமானவை என்று கருதப்படுகின்றன.
- முதலாவது, அவற்றுடன் உடனடியாக எதிர்த்து போரிடவேண்டிய அவசியமில்லை. எப்போது வேண்டுமானாலும் அவற்றைக் கைப்பற்றிக் கொள்ளலாம் என்ற நெகிழ்வுத்தன்மையுடன் காணப்படுகின்றன. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், தாக்க வரும் காய்கள் இவற்றை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் காய்களைக் கைப்பற்றுதல், அரசருக்கு முற்றுகை வைத்தல் போன்ற தாக்குதல் நடவடிக்கைகளில் சுதந்திரமாக ஈடுபட முடிகிறது. தற்காப்பில் விளையாடும் வீரரும் இதைக் காப்பாறுவதை விட வேறு ஏதாவது உபயோகமாக செய்ய முடியுமா என்று சிந்திக்கவே முற்படுகின்றனர். எதிரி கைப்பற்றும் வரை போர்க்களத்தின் நடுவில் கட்டிவைக்கப்பட்டுள்ள சிப்பாயாகவே ஒரு விலகிய சிப்பாய் உள்ளது.
- இரண்டாவது, விலகிய சிப்பாய்க்கு முன் உள்ள கட்டமும் பலவீனமானதே. அந்தக் கட்டத்தில் வந்து நிற்கும் எதிரியின் காயை எதிர்க்க சிப்பாய் இருக்கமாட்டார். எதிரியின் குதிரை பாதுகாப்பாக நிற்க அந்த இடம் பெரிதும் உதவும். இதனால் தான் வில்லெம் சிடெய்ன்சு இந்தக் கட்டத்தை பலவீனமான சதுரம் என்கிறார்.
அரசியின் விலகிய சிப்பாய்
தனிமையில் விடப்பட்ட அரசியின் சிப்பாயை தனித்தீவு சிப்பாய் என்று அழைக்கின்றனர். இது விலகிய சிப்பாய்களில் தனிப்பட்ட வகையாக கருதப்படுகிறது. அரசியின் d- வரிசையில் உள்ள சிப்பாய் விலகிய சிப்பாயாக உருவானால் அதன் அக்கம்பக்கத்தில் உள்ள வரிசைகளில் சிப்பாய்கள் இல்லாமல் போகும். இதனால் இரண்டு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு பலவீனம் உருவாகிறது.
a | b | c | d | e | f | g | h | ||
8 | 8 | ||||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
ஏனெனில், தனித்தீவு சிப்பாய் சதுரங்கப் பலகையின் மத்தியில் உள்ள வரிசைகளில் இருக்க நேரிடுகிறது. அங்கு அந்தச்சிப்பாய் உரிய பாதுகாப்புடன் நின்றால் எதிரியின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும். அங்கிருக்கும் சிப்பாயால்தான் எதிரியைத் தாக்கவும் முடியும் தடுக்கவும் முடியும். மேலும் எதிரியைத் தாக்கும் உத்தி, முற்றுகையிட வியூகம் வகுத்தல் ஆகியவற்றிற்கு அங்கிருக்கும் சிப்பாயே முக்கியத்துவம் வாய்ந்தது. இச்சூழலில், தோள் கொடுக்க தோழர்கள் இன்றி ஒரு சிப்பாய் போர்க்களத்தின் மத்தியில் தனித்து நின்றால் அதைக் காப்பாற்ற அமைச்சரையோ குதிரையையோ நிறுத்த வேண்டியுள்ளது.
இதைப் போலவே தனித்தீவு சிப்பாய் வரிசையின் மூன்றாவது, நான்காவது தரத்தில் நிற்கும்போது அதற்கு முன்னால் உள்ள சதுரம் பலவீனப்பட்டு இருக்கிறது. அக்கட்டத்திற்கு அக்கம்பக்கத்தில் சிப்பாய்கள் எவருமில்லாததால் ஆட்டக்காரர் அங்கிருந்து தாக்கவும் முடியாமல் தடுக்கவும் முடியாமல் திண்டாட வேண்டியதாகி விடுகிறது. ஏனெனில் அங்கிருக்கும் கட்டங்கள்தான் சதுரங்கப் பலகையின் மத்தியப் பகுதியில் உள்ள முக்கியமான கட்டங்களாகும். ஆட்டக்காரர் அடிக்கடி அங்கு காய்களை நிறுத்தி எதிரியைத் தாக்கவோ தடுக்கவோ செய்ய இயலாமல் போகும்.
எனினும் தனித்தீவு சிப்பாய்க்கு இரண்டு பக்கங்களிலும் திறந்த வரிசைகள் உருவாவது ஒருவகையில் நன்மையாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அரசரின் அமைச்சரையும் அரசியின் அமைச்சரையும் e5 மற்றும் c5 கட்டங்களில் நிறுத்தி நடு ஆட்டத்தில் தாக்குதல் வாய்ப்பை பெறலாம் எனக் கருதப்படுகிறது. ஒரு ஆட்டம் இறுதியாட்டத்திற்குச் சென்று விட்டால் தனித்தீவு சிப்பாய் பலவீனமானது என்பதை மறுப்பதற்கு எவருமில்லை. எனவே தனிதீவு சிப்பாய் உடையவர் இறுதியாட்டம் தொடங்குவதற்கு முன்னரே அதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நான்கு சிறிய காய்களுடன் உள்ள தனித்தீவு சிப்பாய் பலமானது என்றும் மூன்று சிறிய காய்களுடன் உள்ள தனித்தீவு சிப்பாய் சற்று பலம் குறைந்தது என்றும் இரண்டு சிறிய வீரர்களை மட்டும் கொண்ட தனித்தீவு சிப்பாய் பலவீனமானவர் என்றும் கல்லேகர் குறிப்பிட்டுள்ளார். வெள்ளை ஆட்டக்காரர் இத்தகைய சிப்பாயை தியாகம் செய்வதும் கருப்பு ஆட்டக்காரர் அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதும் பொதுவான நடைமுறையாக உள்ளது.
மேற்கோள்கள்
- Baburin, Alexander (2003), Winning Pawn Structures, Batsford, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7134-8009-2 This book is entirely about the isolated d-pawn.
- Gallagher, Joe (2002), Starting Out: the Caro-Kann, Everyman Chess, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85744-303-9
இவற்றையும் காண்க
உசாத்துணை
- Aron Nimzowitsch – My System