தரவு மின்முனை
தரவு மின்முனை அல்லது மேற்கோள் மின்முனை என்பது நிலைத்த நன்கு அறிந்த மின்முனை மின்னிலையை உடைய மின்முனை ஆகும். மின்முனை மின்னிலையின் உயர்நிலைப்புத் திறம் குறைப்புவேற்ற அமைப்பைப் பயன்படுத்தி பெறப்படுகிறது. இவ்வமைப்பில் குறைப்புவேற்ற வினையில் பங்குபெறும் ஒவ்வொரு கரைசலின் பொந்திகையுற்ற அல்லது நிறைவுற்ற செறி வும் எப்போதும் மாறாமல் இருக்கும்.[1]
தரவு மின்முனைகள் பல வழிகளில் பயன்படுகின்றன. இதில் மிக எளியமுறை மின்வேதிக் கலத்தை உருவாக்க, அரைக்கலமாகத் தரவு மின்முனையைப் பயன்படுத்துதலே ஆகும். இது அரைக்கலத்தின் குறைப்பு மின்னிலையைக் கண்டறிய வழிவிடுகிறது. தனித்த பிரிநிலை மின்முனையின் மின்னிலையை, அதாவது (தனிப்பிரி மின்முனையின் மின்னிலை)யை, அளக்கும் துல்லியமான நடைமுறை உத்தியை இனிமேல்தான் உருவாக்கவேண்டும்.
நீர்மவகைத் தரவு மின்முனைகள்
பொது தரவு மின்முனைகளும் செந்தர நீரக (Hydrogen) மின்முனையுடன் ஒப்பிட்ட மின்னிலைகளும்:
- செந்தர நீரக மின்முனை (செநீமி) (E=0.000 V) Hஇன் வினைத்திறம்+=1
- இயல்பு நீரக மின்முனை (இநீமி) (E ≈ 0.000 V) Hஇன் செறிவு+=1
- மீளியல்பு நீரக மின்முனை (மீநீமி) (E=0.000 V - 0.0591*pH)
- நிறைவுற்ற கலோமல் மின்முனை (நிகமி) (E=+0.241 V நிறைவுற்றது)
- செம்பு-செம்பு(II) சல்பேட்டு மின்முனை(செசமி) (E=+0.314 V)
- வெள்லிக் குளோரைடு மின்முனை (E=+0.197 V நிறைவுற்றது)
- pH-மின்முனை ( pH செறிவுற்ற கரைசல்களில்)
- பல்லாடியம்-நீரக மின்முனை
- இயங்கியல் நீரக மின்முனை (இநீமி)
- இதள்-இதளியச் சல்பேட்டு மின்முனை (E=+0.64 V in sat'd K2SO4, E=+0.68 V in 0.5 M H2SO4) (இசமி)
-
செந்தர நீரக மின்முனை
-
Cu-Cu(II) தரவு மின்முனை
-
Ag-AgCl தரவு மின்முனை
பகுதி-தரவு மின்முனை (பதமி) மேலே கூறிய சிக்கல்களைத் தவிர்க்கிறது. ஃபெர்ரோசின் அமைந்த பதமி அல்லது அதைப் போன்ற அகச் செந்தர (கொபால்ட்டோசின்)பின்புலமாக அமைந்த ஃபெர்ரோசீன் நீர்மம் அல்லாத பணிகளுக்குக் கருத்தியலாக ஏற்றதாகும். மேலும் நீர்மம் அல்லாத பயன்பாடுகளுக்கு 1960களின் தொடக்கத்தில் இருந்தே பல காரணங்களுக்காக ஃபெர்ரோசீன் பரவலாக ஏற்கப்பட்டுவருகிறது. இதோடு 1984இல், IUPACயும் செந்தரக் குறைப்புவேற்ற இணையாக ஃபெர்ரோசீனைப் பரிந்துரைத்து உள்ளது.[2] பதமி மின்முனையைச் செய்வது எளிது. இதில் ஒவ்வொரு செய்முறைத் தொகுப்புக்கும் புது மேற்கோள் தரவைப் பயன்படுத்தலாம்.. ஒவ்வொரு முறையும் புதியதாகச் செய்துகொள்வதால் மின்முனையின் தேக்கச் சிக்கலோ பேணுதற் சிக்கலோ இல்லை. பிறவற்றைவிட இதன் செலவும் குறைவே.
பதமியைச் செய்யும் வழிமுறை:[சான்று தேவை]
மேலும்காண்க
- வட்டிப்புவகை வோல்டா-அளவியல்
- வினை மின்முனை
- துணை மின்முனை
- செந்தர மின்முனை மின்னிலைகளின் பட்டியல்
மேலும் படிக்க
- Ives, David J. G.; George J. Janz (1961). Reference Electrodes, Theory and Practice (1st ed.). Academic Press.
- Zanello, P. (2003-10-01). Inorganic Electrochemistry: Theory, Practice, and Application (1 ed.). Royal Society of Chemistry. ISBN 0-85404-661-5.
- Bard, Allen J.; Larry R. Faulkner (2000-12-18). Electrochemical Methods: Fundamentals and Applications (2 ed.). Wiley. ISBN 0-471-04372-9.
மேற்கோள்கள்
- ↑ Bard, Allen J.; Faulkner, Larry R. (2000-12-18). Electrochemical Methods: Fundamentals and Applications (2 ed.). Wiley. ISBN 0-471-04372-9.
- ↑ Gritzner, G.; J. Kuta (1984). "Recommendations on reporting electrode potentials in nonaqueous solvents". Pure Appl. Chem. 56 (4): 461–466. doi:10.1351/pac198456040461. http://iupac.org/publications/pac/56/4/0461/. பார்த்த நாள்: 2009-04-17.