தழும்பழி

தழும்பழிக் கோடாரிகள்

தொல்லியலில் தழும்பழி (Acheulean) என்பது கல்லாயுதங்களின் உற்பத்தி முறை சார்ந்த ஒரு வகையைக் குறிக்கும்.[1]இவ்வகைக் கல்லாயுத உற்பத்தி முறையை கீழைப் பழங்கற்கால மக்கள் உபயோகித்த நீள்வட்ட வடிவ அல்லது பேரிக்காய் வடிவம் கொண்ட கோடரிகள் குறிக்கின்றன. முதலில் கீழைப் பழங்கற்கால மக்கள் தழும்புரி என்னும் செப்பனிடப்படாத ஆயுதங்களை உபயோகித்தனர்.

பிற்காலத்தில் அவர்களிடம் ஏற்பட்ட சிந்தனை வளர்ச்சியால் தழும்புரி கல்லாயுதங்களிலுள்ள தழும்புகளை (தழும்பு என்பது கற்களைக் காயப்படுத்திக் கற்களில் உண்டாக்கப்பட்ட தழும்பு) அழித்து அவற்றைத் தழும்புகள் இல்லாதவாறு உருவாக்கக் கற்றுக்கொண்டனர். அதனால் இது தழும்பழி எனப்பெயர் பெற்றது.

தழும்பழி ஆயுதங்கள் கீழைப் பழங்கால ஆப்பிரிக்கா, பெரும்பலான மேற்காசியா, தெற்காசியா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் செய்யப்பட்டன. இவை பொதுவாக ஓமோ இரக்டசு இனத்தின் எச்சங்களுடன் சேர்ந்து காணப்படுகின்றன.

மேற்கோள்கள்

  1. Acheulean industry PREHISTORIC TOOLMAKING