தாரங்கதாரா இராச்சியம்
தாரங்கதாரா இராச்சியம் | ||||||
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா | ||||||
| ||||||
| ||||||
குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிரா தீபகற்பத்தில் தாரங்கதாரா இராச்சியத்தின் அமைவிடம் | ||||||
தலைநகரம் | தாரங்கதாரா | |||||
வரலாறு | ||||||
• | நிறுவப்பட்டது | 1742 | ||||
• | சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் | 1948 | ||||
பரப்பு | ||||||
• | 1892 | 3,023 km2 (1,167 sq mi) | ||||
Population | ||||||
• | 1892 | 100,000 | ||||
மக்கள்தொகை அடர்த்தி | Expression error: Unrecognized punctuation character ",". /km2 (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi) | |||||
தற்காலத்தில் அங்கம் | குஜராத், இந்தியா | |||||
Princely States of India |
தாரங்கதாரா இராச்சியம் (Dhrangadhra State) இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால குஜராத் மாநிலத்தின் சௌராட்டிரா தீபகற்பத்தில் சுரேந்திரநகர் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டிருந்தது. இதன் தலைநகரம் தாரங்கதாரா நகரம் ஆகும்.[1]
வரலாறு
தாரங்கதாரா இராச்சியத்தை 1090-இல் இராஜபுத்திர குல ஆட்சியாளர் ஹர்பால் தேவ் மக்வானா என்பர், தில்லி சுல்தானகத்தை எதிர்த்து, ஜாலாவாத் எனும் பெயரில் நிறுவினார். 1742-இல் தாரகதாரா எனும் புதிய நகரம் நிறுவப்பட்டது. [2][3]1807-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற தாரங்கதாரா இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி இராச்சியம் 1948-ஆம் ஆண்டில் பம்பாய் மாகாணத்துடன் இணக்கப்பட்டது. 1956-இல் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, இராச்சியம் குஜராத் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.
ஆட்சியாளர்கள்
Raj Sahibs of Dhrangadhra
- இரண்டாம் ராய் சிங் பிரதாப் சிங்
- கஜ்சி இரண்டாம் ராய்சி (பிறப்பு:1744?45 - இறப்பு: 1782)
- ஜஸ்வந்த் சிங் இரண்டாம் கஜ் சிங் ( - இறப்பு: 1801)
- இராணி ஜிஜிபாய் குன்வெர்பா - 1758 - 1782
- ராய் சிங் மூன்றாம் ஜஸ்வந்த் சிங் (இறப்பு: 1804
- அமர்சிங் இரண்டாம் ராய்சிங் (இறப்பு: 9 ஏப்ரல் 1843
- ரண்மால் சிங் அமர்சி ராஜா சாகிப் ( 9 ஏப்ரல் 1843 – death 16 அக்டோபர் 1869
- மான்சிங் இரண்டாம் ரண்மால் சிங் (பிறப்பு:16 அக்டோபர் 1869 - இறப்பு: 2 டிசம்பர் 1900
- 2 டிசம்பர் 1900 - 8 பிப்ரவரி 1911 அஜித் சிங் ஜஸ்வந்த் சிங்
- 8 பிப்ரவரி 1911 - 4 பிப்ரவரி 1942 கண்சியாம் சிங் அஜித் சிங் (பிறப்பு:. 1889 - இறப்பு: 1942)
- 4 பிப்ரவரி 1942 – 15 ஆகஸ்டு 1947 மயூர்துவஜ சிங் (மூன்றாம் மேகராஜ்) (பிறப்பு:. 1923 - இறப்பு:. 2010)[4]
இதனையும் காண்க
- கத்தியவார் முகமை
- துணைப்படைத் திட்டம்
- சுதேச சமஸ்தானம்
- சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம்
- இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்
- சௌராஷ்டிர மாநிலம்
வெளி இணைப்புகள்
மேற்கோள்களின் முன்தோற்றம்
- ↑ [1] Surendranagar India. Superintendent of Census Operations, Gujarat - Director, Government Print. and Stationery, Gujarat State, 1964.
- ↑ Watson, John Whaley (1878). Statistical Account of Dhrángadhrá: Being the Dhrángadhrá Contribution to the Káthiáwár Portion of the Bombay Gazetteer (in ஆங்கிலம்). Education society's Press.
- ↑ State), Bombay (India (1884). Gazetteer of the Bombay Presidency ... (in ஆங்கிலம்). Government Central Press.
- ↑ "Indian states before 1947 A-J". rulers.org. பார்க்கப்பட்ட நாள் 2019-08-17.