தாரே ஜமீன் பர்

தாரே ஜமீன் பர்
(Like Stars on the Earth)
இயக்கம்ஆமிர் கான்
அமோல் குப்தே
தயாரிப்புஆமிர் கான்
கதைஅமோல் குப்தே (படைப்பு இயக்குநரும் இவரே)
இசைஷங்கர்-எஹ்ஸான்-லாய்
நடிப்புஇஷான் தர்சீல் சஃபாரி
ஆமிர் கான்
டிஸ்கா சோப்ரா
விபின் சர்மா
சாசெட் இஞ்சினீயர்
தனய் ஹேமந்துச் சேதா
ம.கி.ரைநா
ஒளிப்பதிவுசேது
படத்தொகுப்புதீபா பாட்டியா (கருத்து மற்றும் ஆராய்ச்சியும் கூட)
விநியோகம்ஆமிர் கான் தயாரிப்பு (இந்தியா - திரைப்படம்)
யுடிவி ஹோம் என்டர்டைன்மென்ட் (இந்தியா - டிவிடி)
வால்ட் டிஸ்னி ஹோம் வீடியோ/ஹோம் என்டர்டெயின்மென்ட் (சர்வதேச டிவிடி)
வெளியீடு21 திசம்பர் 2007 (2007-12-21)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஇந்தி/ஆங்கிலம்
ஆக்கச்செலவு 12 கோடி
மொத்த வருவாய் 98கோடி[1]

தாரே ஜமீன் பர் (Taare Zameen Par) என்பது 2007 ஆம் ஆண்டு அமீர்கான் தயாரித்து இயக்கிய இந்திய இந்தி மொழி உளவியல் நாடகத் திரைப்படமாகும். இதில் ஆமிர் கான், தர்ஷீல் சஃபாரி, தனாய் சேடா, விபின் ஷர்மா, டிஸ்கா சோப்ரா ஆகியோருடன் நடித்துள்ளார். இது இசானின் வாழ்க்கையையும் கற்பனையையும் வெளிப்படுத்துகிறது, ஒரு கலைத்திறன் மிக்க 8 வயது சிறுவன், அவரது மோசமான கல்வி செயல்திறனால் உறைவிடப் பள்ளிக்கு அனுப்ப வழிவகுக்கிறது. அங்குள்ள கலை ஆசிரியரான நிகும்ப் ( அமிர்கான்) அந்தச் சிறுவனுக்கு டிஸ்லெக்ஸிக் குறைபாடு உள்ளது என்று சந்தேகித்து அவரது வாசிப்புக் கோளாறிலிருந்து விடுபட அவருக்கு உதவுகிறார்.

படைப்பாற்றல் இயக்குநரும் எழுத்தாளருமான அமோல் குப்தே தனது மனைவி தீபா பாட்டியாவுடன் இணைந்து இந்தக் கதையினை உருவாக்கினர். சங்கர்-எஹ்ஸான்-லாய் இசையமைத்துள்ளார், மேலும் பிரசூன் ஜோஷி பல பாடல்களுக்கு பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்தப் படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் மும்பை, பஞ்ச்கானியின் நியூ எரா உயர்நிலைப் பள்ளியில் நடந்தது, அங்குள்ள பள்ளியின் மாணவர்கள் சிலர் படப்பிடிப்பில் பங்கேற்றனர்.

தாரே ஜமீன் பர் 21 டிசம்பர் 2007- இல் இந்தியாவில் திரையரங்குகளில் வெளியானது. இது வணிக ரீதியாக வெற்றி பெற்றது, உலகளவில் 98.48 கோடி ரூபாய் வருமனம் ஈட்டியது. கதை, திரைக்கதை, இயக்கம், வசனங்கள், ஒலிப்பதிவு மற்றும் நடிப்பிற்காக விமர்சன ரீதியில் நேர்மறையான பாராட்டைப் பெற்றது. டிஸ்லெக்ஸியா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இது உதவியது.

கதை

மும்பையில் வசிக்கும் இசான் என்ற 8 வயது சிறுவன், பள்ளிப் படிப்பைத் தொடர்வதில் சிக்கல் உள்ளது, ஆனால் மற்றவர்கள் இசான் கற்றலை வெறுக்கிறார் என்றும் தொந்தரவு செய்பவர் என்றும் கருதுகின்றனர். அதற்காக அவர் இழிவுபடுத்தப்படுகிறார். இதனால் மூன்றாம் வகுப்பினை மீண்டும் பயில்கிறார். இசானின் கற்பனை, படைப்பாற்றல், கலை மற்றும் ஓவியத்திற்கான திறமை பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன. இசானின் தந்தை நந்த்கிஷோர் அவஸ்தி ஒரு வெற்றிகரமான நிர்வாகி, அவர் தனது மகன்கள் சிறந்து விளங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார், இசானின் தாயார் மாயா ஓர் இல்லத்தரசி, இசானுக்கு கல்வி கற்பிக்க இயலாமையால் விரக்தியடைகிறார். கிசானின் மூத்த சகோதரர் கல்வியில் சிறந்து விளங்கக்கூடிய முன்மாதிரியான மாணவராகத் திகழ்கிறார். ஒரு நாள், இசானின் நடத்தை மற்றும் கல்வித் தரங்களைப் பற்றி விவாதிக்க இசானின் பள்ளி முதல்வரால் இசானும் அவரது பெற்றோரும் அழைக்கப்படுகிறார்கள். இசானின் தோல்விகள் மற்றும் முன்னேற்றம் இல்லாதது பற்றி கேள்விப்பட்டதால் விரக்தியடைந்த நந்கிஷோர், இசானை ஒரு உறைவிடப் பள்ளிக்கு அனுப்புகிறார். அங்கே தனியாக இருப்பதனால், பயம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றினால் பாதிக்கப்படுகிறார். இது அங்குள்ள ஆசிரியர்களாலும் அவர்களின் கடுமையான மற்றும் தவறான அனுகுமுறைகளாலும் மேலும் மோசமடைகிறது. இசானின் ஒரே நண்பர் ராஜன் தாமோதரன், உடல் ஊனமுற்ற சிறுவன், அவர் சிறந்த மாணவர்களில் ஒருவர் மற்றும் அவரது தந்தை பள்ளியின் வாரியத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் அங்கு தனது குடும்பத்தினருடன் வசிக்கிறார். இசான் ஒரு நாள் தற்கொலை செய்து கொள்ள நினைப்பார், ஆனால் ராஜன் கீழே விழுவதை இசான் கேட்கும்போது அந்த எண்ணத்தினைக் கைவிட்டு அவருக்கு உதவ இறங்குகிறார். உறைவிடப் பள்ளியின் கலை ஆசிரியரான திரு ஹோல்கர் பள்ளியை விட்டு வெளியேறியுள்ளதாகவும், அவருக்கு பதிலாக மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கு உதவும் ராம் சங்கர் நிகும்ப் அங்கு பணியில் சேர்கிறார்.

நடிப்பு

நடிகர்/நடிகை பாத்திரம்
தர்ஷீல் சஃபாரி இஷான் அவஸ்தி
ஆமிர் கான் ராம் சங்கர் நிகும்ப் ("நிகும்ப் ஐயா")
டிஸ்கா சோப்ரா மாயா அவஸ்தி / மா
விபின் ஷர்மா நந்தகிஷோர் அவஸ்தி / பாபா
சச்செட் எஞ்சினீயர் யோஹான் அவஸ்தி /தாதா
தனய் செட்டா ராஜன் தாமோதரன்
எம்.கே. ரைனா முதன்மை போட்டோகிராபி
லலிதா லஜ்மி அவள்தான் (ஓவியப்போட்டி நடுவர்)

வெளியீடு

தாரே ஜமீன் பர் டிசம்பர் 14,2007- இல் உலகளவில் வெளியிடப்பட்டது, இருப்பினும் ஆத்திரேலியா, மலேசியா, நியூசிலாந்து மற்றும் பிஜி போன்ற நாடுகளில் திசம்பர் 20 - இல் வெளியாகின.[2][3] இது 425 அச்சுகளுடன் இந்தியாவில் வெளியானது, இருப்பினும் படத்தின் வெளியீட்டாளர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையிலான வருவாய் பகிர்வு பிரச்சினைகள் சில சிறிய தாமதங்களை ஏற்படுத்தின.[3]இந்த படம் முதல் மூன்று நாட்களுக்குள் உள்நாட்டில் ₹15 கோடி (அமெரிக்க டாலர் 3.63 மில்லியன்) வசூலித்தது. மும்பையில் அதன் திரையரங்குகளில் மூன்றாவது வாரத்தில் வருவாயானது 58 சதவீதமாகக் குறைந்தது, ஆனால் அடுத்த வாரத்தில் 62 சதவீதமாக உயர்ந்தது-இது மொத்தமாக 770 மில்லியன் டாலர்களை (அமெரிக்க டாலர் 18.62 மில்லியன் டாலர்கள்) வருவாய் ஈட்டியது.மஹாராஷ்டிரா அரசு திரைப்படத்திற்கு பொழுதுபோக்கு வரியில் இருந்து விலக்கு அளித்தது.

பாராட்டுகள்

தாரே ஜமீன் பர் 2008 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருதையும், குடும்ப நலனில் சிறந்த படத்திற்கான தேசிய திரைப்பட விருதையும் வென்றது.[4][5] 2008 ஜீ சினி விருதுகள், 2008 பிலிம்பேர் விருதுகள், மற்றும் 4 வது அப்சாரா திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தயாரிப்பாளர்கள் சங்க விருதுகளில் ஆமிர்கானின் இயக்குநர் பாத்திரமும் சஃபாரியின் நடிப்பும் அங்கீகரிக்கப்பட்டன.[6][4][7]

மேற்கோள்கள்

  1. Hungama, Bollywood (2007-12-21). "Taare Zameen Par Box Office Collection | India | Day Wise | Box Office - Bollywood Hungama" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-29.
  2. "Taare Zameen Par". Box Office Mojo. Archived from the original on 28 July 2010. பார்க்கப்பட்ட நாள் 27 July 2010.
  3. 3.0 3.1 "Taare Zameen Par to be released in multiplexes". Yahoo! India Movies. Archived from the original on 28 July 2010. பார்க்கப்பட்ட நாள் 27 July 2010.
  4. 4.0 4.1 "Taare Zameen Par sweeps Filmfare Awards". Yahoo! India Movies. 24 February 2008. Archived from the original on 28 February 2008. பார்க்கப்பட்ட நாள் 29 July 2010.
  5. "55th National Film Awards for the Year 2007" (PDF). Press Information Bureau (Govt. of India). Archived from the original (PDF) on 7 October 2009.
  6. "Winners of the Zee Cine Awards 2008". Bollywood Hungama. 27 April 2008. Archived from the original on 14 August 2011. பார்க்கப்பட்ட நாள் 27 November 2010.
  7. "Winners of 4th Apsara Film & Television Producers Guild Awards". Bollywood Hungama. 5 December 2009. Archived from the original on 8 December 2009. பார்க்கப்பட்ட நாள் 27 November 2010.


வெளி இணைப்புகள்