திரிம்பகம்

திரிம்பகம்
திரிம்பகம்
நகரம்
திரிம்பகம் is located in மகாராட்டிரம்
திரிம்பகம்
திரிம்பகம்
Location in Maharashtra, India
ஆள்கூறுகள்: 19°56′N 73°32′E / 19.93°N 73.53°E / 19.93; 73.53
Country இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்நாசிக்
ஏற்றம்
750 m (2,460 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்12,056
மொழிகள்
 • அலுவல்மராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

திரிம்பகம் (Trimbak) என்பது ஒரு நகரமாகும். நகராட்சி அமைப்பான இது இந்திய மாநிலமான மகாராட்டிராவில் நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற திரிம்பகேஸ்வர் சிவன் கோயில் இங்கு அமைந்துள்ளது. இது பன்னிரண்டு சோதிர்லிங்கங்களில் ஒன்றாகும். இங்கு மகாராட்டிராவின் திரிம்பகேஸ்வரில் இந்து பரம்பரை பதிவேடுகள் வைக்கப்பட்டுள்ளன. புனித கோதாவரி ஆற்றின் தோற்றம் திரிம்பகத்திற்கு அருகில் உள்ளது.

நாசிக் மாவட்டத்தில் சிம்மகஸ்த கும்ப மேளா முதலில் திரிம்பகத்தில் நடைபெற்றது. ஆனால் 1789 ஆம் ஆண்டு வைணவர்களுக்கும் சைவர்களுக்கும் இடையில் நடந்த மோதலுக்கு முன்னதாக, மராட்டிய பேஷ்வா கும்பமேளாவில் வைணவர்கள் குளிக்கும் இடத்தை நாசிக் நகரில் ராம்குண்டம் என்ற இடத்திற்கு மாற்றினார். [2] திரியம்பகத்தை கும்பமேளாவின் சரியான இடமாக சைவர்கள் தொடர்ந்து கருதுகின்றனர். [3]

நிலவியல்

திரிம்பகம் 19.56 ° வடக்கிலும் 73.32 ° கிழக்கிலும் அமைந்துள்ளது. [4] இது சராசரியாக 720 மீட்டர் உயரத்தில் உள்ளது. (2362 அடி).

புள்ளிவிவரங்கள்

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, திரிம்பகத்தின் மக்கள் தொகை 12,056 பேராகும். ஆண்கள் மக்கள் தொகையில் 51 சதவீதமும், பெண்கள் 49 சதவீதமும் இருக்கின்றனர். திரியம்பகம் சராசரியாக 89.61 சதவீதம் கல்வியறிவு விகிதத்தைக் கொண்டுள்ளது: ஆண் கல்வியறிவு 94.12 சதவீதமும், மற்றும் பெண் கல்வியறிவு 84.88 சதவீதமும் ஆகும். திரிம்பகத்தின், மக்கள் தொகையில் 11.10 சதவீதம் பேர் % 6 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்.

வரலாறு

ஒரு நகரம் நிர்மானிக்கப்பட்டு, பின்னர் இது திரிம்பகேஸ்வர் என பிரபலமானது. பேஷ்வாக்களின் ஆட்சி காலத்தில் நானா சாகேப் பேஷ்வா திரிம்பகேஸ்வர் கோவிலைக் கட்டுமாறு அறிவுறுத்தியதுடன், திரிம்பகேஸ்வர் நகரத்தை உருவாக்கி அழகுபடுத்தினார்.

நீல மணி - இங்கிருந்த ஒரு பெரிய நீல வைரத்திற்கு, நாசக் வைரம் என்று பெயரிடப்பட்டது. இது திரிம்பகேஸ்வர் கோயிலை அலங்கரித்தது. பாஜிராவ் பேஷ்வாவிலிருந்து இந்த வைரத்தை ஜே. பிரிக்ஸ் என்ற ஆங்கில கர்னல் எடுத்துச் சென்றதாக அறியப்படுகிறது. பின்னர், பிரிக்ஸ் வைரத்தை பிரான்சிஸ் ராவ்டன்-ஹேஸ்டிங்ஸுக்கு வழங்கினார். அது பின்னர் இங்கிலாந்து சென்றது.

குறிப்பு

  1. District Census Handbook: Nashik
  2. James G. Lochtefeld (2008). "The Kumbha Mela festival processions". In Knut A. Jacobsen (ed.). South Asian Religions on Display: Religious Processions in South Asia and in the Diaspora. Routledge. p. 33.
  3. Vaishali Balajiwale. "Project Trimbak, not Nashik, as the place for Kumbh: Shaiva akhadas". 
  4. Falling Rain Genomics, Inc - Trimbak