திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 2009-நடப்பு |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 13,31,724[1] |
சட்டமன்றத் தொகுதிகள் | 49. ஜோலார்பேட்டை 50. திருப்பத்தூர் 62. செங்கம் (தனி) 63. திருவண்ணாமலை 64. கீழ்பெண்ணாத்தூர் 65. கலசப்பாக்கம் |
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி (Tiruvannamalai Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 11ஆவது தொகுதி ஆகும்.
தொகுதி மறுசீரமைப்பு
2008 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது, திருப்பத்தூர் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டது. அதற்குப் பதில் அதில் இருந்த சில தொகுதிகளையும், வந்தவாசியில் இருந்த சில தொகுதிகளையும் எடுத்து திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.
சட்டமன்ற தொகுதிகள்
இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:
வென்றவர்கள்
தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | கூட்டணி | ஆதாரம் |
---|---|---|---|---|
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 | த. வேணுகோபால் | திமுக | ||
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | வனரோஜா | அ.தி.மு.க. | ||
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 | அண்ணாத்துரை | திமுக |
வாக்காளர்கள் எண்ணிக்கை
தேர்தல் | ஆண்கள் | பெண்கள் | மற்றவர்கள் | மொத்தம் | ஆதாரம் |
---|---|---|---|---|---|
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | 6,64,261 | 6,67,440 | 23 | 13,31,724 | ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[2] |
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 |
வாக்குப்பதிவு சதவீதம்
தேர்தல் | வாக்குப்பதிவு சதவீதம் | முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு | ஆதாரம் |
---|---|---|---|
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 | 79.89% | - | [3] |
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | 78.80% | ↓ 1.09% | [1] |
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 |
18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
முக்கிய வேட்பாளர்கள்
இத்தேர்தலில், 6 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 19 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 25 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த வேட்பாளர் சி. என். அண்ணாதுரை, அதிமுகவின் எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தியை 3,04,187 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | சின்னம் | கட்சி | தபால் வாக்குகள் | பெற்ற மொத்த வாக்குகள் | வாக்கு சதவீதம் (%) |
---|---|---|---|---|---|
சி. என். அண்ணாதுரை | திமுக | 4,553 | 6,66,272 | 57.85% | |
எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி | அதிமுக | 1,829 | 3,62,085 | 31.44% | |
ஞானசேகர் | அமமுக | 136 | 38,639 | 3.35% | |
ரமேஷ்பாபு | நாம் தமிழர் கட்சி | 245 | 27,503 | 2.39% | |
அருள் | மக்கள் நீதி மய்யம் | 142 | 14,654 | 1.27% | |
நோட்டா | - | - | 94 | 12,317 | 1.07% |
16-ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
முக்கிய வேட்பாளர்கள்
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
வனரோஜா | அ.தி.மு.க | 5,00,751 |
சி. என். அண்ணாதுரை | தி.மு.க | 3,32,145 |
எதிரொலி மணியன் | பாமக | 1,57,954 |
ஏ.சுப்ரமணியம் | இந்திய தேசிய காங்கிரசு | 17,854 |
15-ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
30 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் வேணுகோபால் பாமகவின் காடுவெட்டிகுரு என்னும் ஜெ. குருநாதனை 1,48,300 வாக்குகள் வேறுபாட்டில் வென்று திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார்.[சான்று தேவை]
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
த. வேணுகோபால் | திமுக | 4,73,866 |
காடுவெட்டி குரு என்னும் ஜெ. குருநாதன் | பாமக | 2,88,566 |
எசு. மணிகண்டன் | தேமுதிக | 56,960 |
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. பார்க்கப்பட்ட நாள் 29 செப்டம்பர் 2018.
{cite web}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014" (PDF). முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 10 சனவரி 2014. Archived from the original (PDF) on 2014-03-30. பார்க்கப்பட்ட நாள் 3 பெப்ரவரி 2014.
{cite web}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 30, 2014.
{cite web}
: Check date values in:|accessdate=
(help)