திருவல்லவாழ் ஸ்ரீவல்லப கோயில்

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
திருவல்லவாழ் (ஸ்ரீவல்லப கோயில்)
புவியியல் ஆள்கூற்று:9°22′25″N 76°33′45″E / 9.373740°N 76.562393°E / 9.373740; 76.562393
பெயர்
புராண பெயர்(கள்):ஸ்ரீவல்லப மகாஷேத்திரம்
பெயர்:திருவல்லவாழ் (ஸ்ரீவல்லப கோயில்)
வரிவடிவம்:ശ്രീവല്ലഭ മഹാക്ഷേത്രം
அமைவிடம்
ஊர்:திருவல்லா
மாவட்டம்:பத்தனம்திட்டா
மாநிலம்:கேரளம்
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:திருவாழ்மார்பன், ஸ்ரீவல்லபன், கோலப்பிரான்
தாயார்:செல்வத் திருக்கொழுந்துநாச்சியார், வாத்சல்ய தேவி
தீர்த்தம்:கண்டகர்ண தீர்த்தம், பம்பை தீர்த்தம்
மங்களாசாசனம்
பாடல் வகை:நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
மங்களாசாசனம் செய்தவர்கள்:நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
விமானம்:சதுரங்க கோல விமானம்
வரலாறு
வலைதளம்:www.srivallabhatemple.org

திருவல்லவாழ் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது திருவல்லா, ஸ்ரீவல்லப ஷேத்ரம் எனவும் அழைக்கப்படுகின்றது.[1] கருடபுராணம், மத்ஸ்யபுராணம் போன்றவற்றில் இத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இறைவர் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் திருவாழ்மார்பன், ஸ்ரீவல்லபன், கோலப்பிரான் என அழைக்கப்படுகிறார்.[2] இறைவி செல்வத் திருக்கொழுந்துநாச்சியார், வாத்சல்ய தேவி என அழைக்கப்படுகிறார். இத்தல தீர்த்தம் கண்டகர்ண தீர்த்தம், பம்பை தீர்த்தம் ஆகியனவாகும். இதன் விமானம் சதுரங்க கோல விமானம் எனும் அமைப்பைச் சேர்ந்தது.

மேற்கோள்கள்

  1. ஆ.எதிராஜன் B.A.,. 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு. தமிழ் இணையப் பல்கலைக் கழகம்.{cite book}: CS1 maint: extra punctuation (link)
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-01-21. பார்க்கப்பட்ட நாள் 2013-05-21.