திருவார்ப்பு கிருஷ்ணர் கோயில்

திருவார்ப்பு கிருஷ்ணர் கோயில்
திருவார்ப்பு கிருஷ்ணர் கோயில்
திருவார்ப்பு கிருஷ்ணர் கோயில் is located in கேரளம்
திருவார்ப்பு கிருஷ்ணர் கோயில்
திருவார்ப்பு கிருஷ்ணர் கோயில்
கோயிலின் அமைவிடம்
ஆள்கூறுகள்:9°34′46″N 76°28′26″E / 9.57944°N 76.47389°E / 9.57944; 76.47389
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளம்
மாவட்டம்:கோட்டயம்
அமைவு:திருவார்ப்பு
கோயில் தகவல்கள்
மூலவர்:கிருட்டிணன்
சிறப்பு திருவிழாக்கள்:விஷூ,
• கிருஷ்ண ஜன்மாஷ்டமி,
• மேடமாதத்தில் திரு உற்சவம்
வரலாறு
கோயில் அறக்கட்டளை:திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியம்

திருவார்ப்பு கிருஷ்ணர் கோயில் (തിരുവാർപ്പ് ശ്രീകൃഷ്ണസ്വാമി ക്ഷേത്രം) என்பது இந்தியாவின், கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தின் திருவார்ப்பு கிராமத்தில் மீனச்சிலாற்றின் கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஒரு கிருஷ்ணர் கோயிலாகும்.[1] இந்த கிராமத்திற்கு திருவார்ப்பு என்ற பெயர் உண்டாக இந்தக் கோயிலே காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் திருவார்ப்பின் பிரபலத்திற்கு முக்கிய காரணம் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கிருஷ்ணர் கோயிலாகும். முன்னதாக குன்றம்பள்ளிக்கரை என்றறியப்பட்டிருந்த இந்த பிரதேசம் இந்த கோயிலினால் திருவார்ப்பு ஆயி என மாறியது.[2] இகோயிலின் பராவார தெய்வங்களாக பிள்ளையார், சாஸ்தா, முருகன், நாகதெய்வங்கள், பிரம்மரட்சதன், யக்சி போன்றோரும் உள்ளனர்.

கேரள நாடகாட்டியின் மேடமாதத்தின் விஷூ நாளில் ஆறாட்டு விழா கோலாகலமாக நடைபெறும். இதற்கிடையில் வரும் ஐந்தாம் நாளின் புறப்பாடும் அதனுடன் தொடர்புடைய யானையோட்டமும் அதிகம்பீரமாகாக இருக்கும். திருவிதாங்கூர் தேவஸ்தானம் வாரியத்தால் இந்த கோயில் பராமரிக்கபடுகிறது.

தொன்மம்

பாண்டவர்களின் வனவாசத்தின்போது அவர்கள் வழிபட கிருஷ்ணனே தனது சிலை ஒன்றை அவர்களுக்கு அளித்தார். வனவாசத்தின் போது அச்சிலையை வழிபட்ட அவர்கள் வனவாசம் முடிந்ததும் அட்சயப் பாத்திரத்தையும், இந்த கிருஷ்ணர் சிலையையும் ஆற்றில் விட்டனர்.

பல காலம் கழித்து ஒரு மகான் படகில் கடலில் சென்றபோது அந்தச் சிலையை கண்டறிந்தாராம். அவர் செல்லவேண்டிய திசைக்கு எதிராக காற்றின் போக்கில் சென்ற படகு, மீனச்சிலாற்றின் கரையில் வந்து நின்றது. தர்ம சாஸ்தாவுக்காக கட்டப்பட்டு, சிலை வைக்காமல் இருந்த கோயிலில் அச்சலையையை அவர் பிரதிடை செய்தார் என்ற ஒரு நம்பிக்கை உள்ளது.[3]

சிறப்பு

இக்கோயிலில் கிருஷ்ணன் நான்கு கைகளுடன் காட்சியளிக்கிறார். கம்சனை வதம் செய்த பிறகு அந்தச் சோர்வு நீங்காமல் வந்து நின்ற மூர்த்தியாக இவர் கருதப்படுகிறார். அதனால் பசியுடன் இருப்பதாக கருதப்படுகிறார். இதனால் இந்தியாவில் முதலில் நடை திறக்கும் கோயிலாக திருவார்ப்பு கோயில் உள்ளது. கிருஷ்ணனுக்கு பசி வந்துவிடும் என்பதற்காக அவசர அவசரமாக நள்ளிரவு இரண்டு மணிக்கே நடை திறக்கபடுகிறது.[4][5] இதில் ஒரு சிறப்பம்சமாக கோயில் கதவைத் திறக்கவரும் அரச்சகர் ஒரு கோடாரியையும் தயாராக வைத்திருப்பார். ஒருகால் கோயில் கதவை திறக்கும் சாவி வேலை செய்யாவிட்டால் அதனால் ஏற்படும் தாமத்ததால் இறைவனுக்கு பசி வந்துவிடக்கூடாது என்பதால் கோடாரியைக் கொண்டு கதவை உடைப்பதற்கு இது ஒரு ஏற்பாடாகும்.[6] நள்ளிரவில் உசத்கால பூசையுடன் வழிபாடு துவங்குகிறது. இறைவனுக்கு முதலில் அபிசேகம் நடக்கும். இறைவன் பசி பொறொக்கமாட்டார் என்பதால் தலையை மட்டும் துடைத்துவிட்டு உசபாயாசம் என்னும் ஒருவகை நெய் பாயாசம் படைக்கப்படுகிறது.[6] அதன் பிறகே இறைவனின் உடல் துடைக்கப்படுகிறது. பின்னர் நாள் முழுவதும் பல்வேறு பூசைகள் நடக்கின்றன. இரவு எட்டு மணிக்கு நடை சாத்தப்படுகிறது. நடை சாத்தும் முன் வெளியே வரும் அர்ச்சகர் இங்கே யாராவது பசியுடன் இருக்கிறார்களை என்று கேட்பார். இங்கு சுவாமி மட்டுமள்ள பக்தர்களும் பசியோடு இருக்கக் கூடாது என்பதால் அவ்வாறு கேட்கின்றனர்.[6]

கிரகண காலத்தில் எல்லா கோயில்களின் நடையும் அடைக்கபடுவது வழக்கம். ஆனால் இறைவன் பசியால் வாடக்கூடாது என்பதால் இக்கோயில் நடை சாத்தபடுவதில்லை. கிரகண காலத்தில் பூசைகள் நடக்கின்றன. இதனால் ஆண்டின் அனைத்து நாட்களிலும் கோயில் திறந்திருக்கும்.

மேற்கோள்கள்