தீனாள்
தீனாள் Dinah | |
---|---|
דִּינָה | |
தீனாவை பலவந்தமாகக் கடத்தப்படுதல் கற்ப்பனை ஓவியம். ஓவியர் சேம்சு டிசோட் அவர்களால் சித்தரிக்கப்பட்டது. | |
தாய்மொழியில் பெயர் | דִּינָה |
பெற்றோர் | யாக்கோபு (தந்தை) லேயா (தாய்) |
உறவினர்கள் |
தீனாள் அல்லது தீனா (ஆங்கிலத்தில்:Dinah) (/ˈdiːnə/; எபிரேயம்: דִּינָה, தற்கால Dīna திபேரியம் Dīnā ; "judged; vindicated") என்பவர் தொடக்க நூல்லில் குறிப்பிடுவதன்படி, இசுரயேலிய கோத்திரத்தாரின் தந்தை என அழைக்கப்படும் யாக்கோபு மற்றும் லேயாவின் ஏழு குழந்தைகளில் இவரும் ஒருவராவார்.[1] மேலும் யாக்கோபுக்கு ஒரேயேரு பெண் வாரிசும் தீனாள் மட்டுமே ஆவார்.
வாழ்க்கைச் சுருக்கம்
தீனாளின் வாழ்க்கைக் குறிப்புகள் யூத புனித நூலான டனாக் மற்றும் கிறிஸ்தவ புனித நூலான விவிலியத்தின் தொடக்க நூல்ன் அதிகாரம் 30, 34, 46 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
விவிலியத்தின் பழைய ஏற்பாடுடின் தொடக்க நூல்லில் கூறப்பட்டுள்ளபடி, தீனாள் இசுரயேலிய கோத்திரத்தாரின் தந்தை என அழைக்கப்படும் யாக்கோபுவின் பதின்மூன்று பிள்ளைகளில் இவர் ஒருவரே பெண்பிள்ளை ஆவார். மேலும் தீனாளைப் பற்றி விவிலியத்தின் தொடக்க நூலில், யாக்கோபுவின் தாயின் சகோதரனான லாபானின் ஊரில் தங்கியிருக்கையில் யாக்கோபின் முற்பிதாக்களின் இறைவன் அவனுக்கு நீ உனது சொந்த நாட்டுக்கு திரும்பிப் போ. எனக் கட்டளையிட்டார். பின்னர் யாக்கோபு மற்றும் மனைவிமார்கள் பிள்ளைகள் அவன் சேர்த்த செல்வங்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு அவன் சொந்த ஊரான கானான் தேசத்திர்க்கு பயனித்தான். பின்னர் யாக்கோபு கானான் நாட்டிலிலுள்ள சீகேம் நகரத்திற்கு அருகிலுள்ள வயலில் கூடாரத்தைப் போட்டு தங்கினார்கள். இந்த வயலை யாக்கோபு சீகேமின் தந்தையான ஏமோரிடம் நூறு வெள்ளிக் காசுகள் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளார்.[2] பின்னர் தீனாள் அருகேயுள்ள சீகேம் நகருக்குள் சென்று அங்குள்ள பெண்களைப் பற்றி அறிந்துகொள்ள அங்கு தனியாக சென்றால். அப்போது அப்பகுதியின் ஆட்சியாளரான ஏமோரின் மகனான சீகேம் தீனாளைப் பார்த்தான். அவள் அழகில் மயங்கிய அவன் அவளைக் கடத்தி கட்டாயப்படுத்தி விருப்பத்துக்கு மாறாக பாலியல் வல்லுறவில் ஈடுபட்டான்.[3] பின்னர் அவளைவிட மனமில்லாமல் தனது மாளிகையில் அடைத்துவைத்தான். இந்த தீய நிலைமையை யாக்கோபு மற்றும் அவர் மகன்களும் அறிந்து கொண்டார்கள். பின்னர் அவரது மகன்களான சிமியோன் மற்றும் லேவியும் இதற்க்குக் காரணமான சீகேம் மற்றும் அவனது தந்தையான ஏமோர்வையும் பழிவாங்க என்னினார்கள். பின்னர் யாக்கோபிடம் ஏமோர் என் மகன் சீகேம் உங்கள் மகள் தீனாளைப் பெரிதும் விரும்புகிறான், அவளை அவன் மணந்து கொள்ள அனுமதி கேட்டார். அதர்க்கு தீனாளின் மூத்த சகோதரர்கள், எங்கள் சகோதரியை நீ மணந்து கொள்ள வேண்டுமேயானால் நீயும் உன் நகரத்திலுள்ள அனைத்து ஆண்களும் விருத்தசேதனம் செய்து கொண்ட பிறகு நாம் அனைவரும் ஒரே இனங்களாகக் கருதப்படும்.[2] பின்னர் உங்கள் ஆண்கள் எங்கள் பெண்களையும், எங்கள் ஆண்கள் உங்கள் பெண்களையும் மணந்து கொள்ளளாம் என்றார்கள். பின்னர் ஏமோரின் ஆலோசனையை ஏற்று சீகேம் நகரின் ஒவ்வொரு ஆண்மகனுக்கும் விருத்தசேதனம் செய்துகொண்டனர். விருத்தசேதனம் செய்து கொண்டு மூன்று நாட்கள் ஆனநிலையில் விருத்தசேதனம் செய்து கொண்ட ஆண்களுக்குப் புண் ஆறாமலும் சோர்வாக இருந்தார்கள்.[4] இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட தீனாளின் சகோதரர்களான சிமியோனும் லேவியும், சீகேம் நகருக்குள் வாள்களுடன் நுழைந்து அங்குள்ள அனைத்து ஆண்களையும் ஏமோரையும் சீகேமையும் வெட்டிக் கொன்றார்கள்.[4] பின்பு தீனாளை அழைத்துக்கொண்டு சீகேமின் மாளிகையை விட்டு வெளியேறினார்கள்.[2] பின்பு யாக்கோபு தனது இரு மகன்களின் கொடூரச் செய்கைகளுக்காக மனம் வருந்தினார். நீங்கள் எனக்கு மிகுதியாகத் தொல்லை கொடுக்கிறீர்கள். இந்தப் பகுதியிலுள்ள அனைத்து கானானியர்களும் பெரிசியர்களும் எனக்கு எதிராகத் திரும்புவார்கள். நாம் கொஞ்சம் பேர் தான் இருக்கிறோம். இங்குள்ள மக்கள் எல்லாம் கூடி நம்மோடு சண்டைக்கு வந்தால் நாம் அழிக்கப்பட்டுவிடுவோம்.[2] நமது மக்கள் அனைவரும் அழிந்து போவார்கள் என்று கொலைவெறி பிடித்த தன் மகன்களிடம் கூறினார்.[2]
குடும்ப மரம்
தேராகு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சாராள் | ஆபிரகாம் | ஆகார் | ஆரான் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாகோர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இஸ்மவேல் | மில்கா | லோத்து | இசுக்கா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இஸ்மவேலர் | 7 மகன்கள்[5] | பெத்துவேல் | 1 வது மகள் | 2 வது மகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஈசாக்கு | ரெபேக்கா | லாபான் | மோவாப்பியர் | ஆமோனியர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஏசா | யாக்கோபு | ராகேல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பில்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஏதோமியர் | சில்பா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
லேயா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1. ரூபன் 2. சிமியோன் 3. லேவி 4. யூதா 9. இசக்கார் 10. செபுலோன் 11. தீனாள் | 7. காத்து 8. ஆசேர் | 5. தாண் 6. நப்தலி | 12. யோசேப்பு 13. பெஞ்சமின் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மேற்கோள்கள்
- ↑ ஆதியாகமம் 30:21
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 "விவிலியம் கதைகள் 12: கேடில் முடிந்த கூடா நட்பு". இந்து தமிழ் (நாளிதழ்) (The hindutamil). சூன் 14, 2017. https://www.hindutamil.in/amp/news/spirituals/177479-12.html. பார்த்த நாள்: 12 மார்ச் 2023.
- ↑ ஆதியாகமம் 34:2
- ↑ 4.0 4.1 "யெகோவாவின் சாட்சிகள் விவிலியம் ஆதியாகமம்". யெகோவாவின் சாட்சிகள். jw.org. சூன் 14, 2017. Event occurs at 01:35 pm. பார்க்கப்பட்ட நாள் 17 மார்ச் 2023.
{cite web}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Genesis 22:21-22: Uz, Buz, Kemuel, Chesed, Hazo, Pildash, and Jidlaph
குறிப்புகள்
வெளியிணைப்புகள்
விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி
- Dinah's Abduction from a Jewish perspective at Chabad.org
- Blyth, C. (2008). "Redeemed by His Love? The Characterization of Shechem in Genesis 34". Journal for the Study of the Old Testament 33: 3–18. doi:10.1177/0309089208094457.