துப்போலெவ் டி.யு-144

டு-144
1975 பாரிசு வானூர்தி காட்சியில் டு-144]]
வகை மீயொலிவேக பயண வானூர்தி
உற்பத்தியாளர் டுபோலேவ் நிறுவனம்
முதல் பயணம் 31 டிசம்பர் 1968
அறிமுகம் 26 டிசம்பர் 1975
நிறுத்தம் 1 ஜனவரி 1978 (1999இல் நாசா பயன்பாடு நிறுத்தம்)
முக்கிய பயன்பாட்டாளர்கள் ஏரோஃபளாட்
வானூர்தி உற்பத்தி அமைச்சகம்
தயாரிப்பு எண்ணிக்கை 16

டுபோலேவ் டு-144 (Tupolev Tu-144, நேட்டோ பெயர்: சார்ஜர்) ஒரு சோவியத் மீயொலிவேக பயண வானூர்தியாகும். உலகில் வணிகரீதியிலான மீயொலிவேக இரண்டு வானூர்திகளில் இது ஒன்றாகும். மற்றொன்று ஆங்கில-பிரெஞ்சு தயாரிப்பான கான்கார்ட். சனவரி 1962-ல் இதன் வடிவமைப்பு உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அலெக்சிஸ் டுபோலேவ் என்பவரின் தலைமையில் நடத்தப்பட்ட சோவியத் டுபோலேவ் வடிவமைப்பு மையத்தால் இவ்வானூர்தி வடிவமைக்கப்பட்டது. இதுவே டுபோலேவின் ஒரே வணிகரீதியிலான மீயொலிவேக வானூர்தியாகும். இம்மையத்தால் வடிவமைக்கப்பட்ட மற்ற மீயொலிவேக வானூர்திகள் ராணுவ பயன்பாடுகளுக்கானவை.

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்