தேடல் வெற்றி வீரர்

உள்நாட்டு லாக்சுகலன் துணையுடன் கான்கிஸ்டேடோர்கள் டெனோக்டிட்லானிற்குள் நுழைதல்

தேடல் வெற்றி வீரர் அல்லது கான்கிஸ்டேடோர் (Conquistador) /kɒŋˌkɪstəˈdɔːrz/ (போர்த்துகேயம் அல்லது எசுப்பானியத்தில் "வெற்றியாளர்கள்"; எசுப்பானிய ஒலிப்பு: [koŋkistaˈðoɾes], போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [kũkiʃtɐˈdoɾis], [kõkiʃtɐˈðoɾɨʃ]) பொதுவாக எசுப்பானியப் பேரரசு மற்றும் போர்த்துகல் பேரரசின் தேடலியலாளர்களையும் நாடுபிடி படைவீரர்களையும் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்லாகும்.[1][2] கண்டுபிடிப்புக் காலத்தின் போது வெற்றிவீரர்கள் ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காக்கள், ஓசியானியா, ஆபிரிக்கா,ஆசியாவிற்கு கடற்பயணங்கள் மேற்கொண்டு புதிய வணிகத் தடங்களை நிறுவியதோடு நிலப்பகுதிகளையும் கைப்பற்றினர். 16வது, 17வது, 18வது நூற்றாண்டுகளில் எசுப்பானியா, போர்த்துகல் பேரரசுகளுக்காக உலகின் பெரும்பகுதியை குடிமைப்படுத்தினர்.

மிகவும் வெற்றிபெற்ற முதல் தேடல் வீரராக எர்னான் கோட்டெஸ் இருந்தார். 1520க்கும் 1521க்கும் இடையே, அஸ்டெக் அரசின் உள்நாட்டு எதிர்ப்பாளர்களுடன் இணைந்து கோட்டெஸ் வலிமைபெற்றிருந்த அசுடெக் பேரரசை வீழ்த்தினார். தற்கால மெக்சிக்கோ எசுப்பானியப் பேரரசின் கீழ் புதிய எசுப்பானியாவானது. பின்னாளில் இதேபோன்ற வலிதான இன்கா பேரரசை பிரான்சிஸ்கோ பிசாரோ கண்டறிந்ததுடன் வெற்றி கொண்டார்.

தேடல் வெற்றி வீரர்களின் பட்டியல்

மேற்சான்றுகள்

மேற் தகவல்களுக்கு

வெளியிணைப்புகள்